ஏரோ இந்தியா 2023; விமான கண்காட்சியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ஏரோ இந்தியா 2023 ஆம் ஆண்டிற்கான விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஏரோ இந்தியா 2023 ஆம் ஆண்டின் விமான கண்காட்சி பிப்ரவரி 13 இன்று இருந்து 17 வரை நடக்கிறது. பெங்களூரு யெலஹங்கா விமானப்படை நிலையத்தில், விமான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டுறவை ஏற்படுத்துதல் ஆகும். இந்த, ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700, இந்திய நிறுவனங்கள் உட்பட 800 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்கும்.
ஏரோ இந்தியா 2023; 5 நாட்கள் நடைபெறும் விமான கண்காட்சி
இந்த கண்காட்சியில் இராணுவம் ஆதிக்கம் செலுத்தும் என்றாலும் உள்நாட்டு பயண ஏற்றம் மற்றும் வெளிநாட்டில் அதன் பிராண்டை மீண்டும் கட்டமைக்க இந்தியாவின் முயற்சிகள் இடம்பெறும். மேலும், இந்தியா பெவிலியனில் இருந்து தேஜஸ் போர் விமானம் முதல் முறையாக விமான கண்காட்சி பங்கேற்க இருக்கிறது. விமான கண்காட்சியின் காரணமாகவுவும் பிரதமரின் வருகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விமான கண்காட்சியை பொதுமக்களும் கண்டுகளிக்க ஒரு நபருக்கு ரூ.2.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.