வெளியானது 2025 ஆடி Q6 இ-ட்ரான் EV
செய்தி முன்னோட்டம்
ஜெர்மன் ஆட்டோமேக்கரான ஆடி, Q6 e-tron என்ற SUVயை உலக சந்தைகளில் வெளியிட்டுள்ளது.
போர்ஷ் மக்கான் EV போலவே இதுவும் புதுமையான பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலக்ட்ரிக் (PPE) கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன இயங்குதளம் 800-வோல்ட் அமைப்பு, எடை விநியோகத்திற்காக இரண்டு பின்புற மின்சார மோட்டார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
புதிய Q6 e-tronயில் உள்ள தனித்துவமான உயர்-நிலை LED DRLகள் மற்றும் அகலமான பின்புற டயர்கள் ஆகியவை அதன் மேம்படுத்தப்பட்ட டிரைவிங் டைனமிக்ஸுக்கு பங்களிக்கிறது.
அதன் உட்புறத்தில் 14.5-இன்ச் சென்ட்ரல் வளைந்த டிஸ்பிளே உள்ளது.
ஆடி
ஆடி Q6 இ-ட்ரான் EVயின் அம்சங்கள்
கூடுதலாக, முன்பக்க பயணிகளுக்கான 10.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் விண்ட்ஷீல்டில் படங்களைக் காண்பிக்கும் ஏஆர் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவை இதில் உள்ளன.
இந்த SUVயில் AIஆல் இயங்கும் டிஜிட்டல் உதவியாளர் அம்சமும் உள்ளது.
நிலையான Q6 மற்றும் செயல்திறன் சார்ந்த SQ6 ஆகிய இரண்டு வகைகளில் இந்த ஆடி கார் கிடைக்கிறது.
இரண்டு மாடல்களும் 100kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகின்றன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 625கிமீ வரை செல்லக்கூடிய திறன் இந்த காருக்கு உள்ளது.
இந்த காரில் இருக்கும் மேம்பட்ட 800-வோல்ட் சார்ஜிங் சிஸ்டத்தை 270kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்தால், இந்த கார் வெறும் 21 நிமிடங்களில் 10-80% வரை சார்ஜ் ஆகிவிடும்.