Page Loader
வெளியானது 2024 மஹிந்திரா XUV400 ப்ரோ எலக்ட்ரிக் கார் 

வெளியானது 2024 மஹிந்திரா XUV400 ப்ரோ எலக்ட்ரிக் கார் 

எழுதியவர் Sindhuja SM
Jan 11, 2024
02:56 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் புதிய XUV400 ப்ரோவை வெளியிட்டுள்ளது மஹிந்திரா நிறுவனம். இதன் அறிமுக விலை ரூ. 15.49 லட்சமாகும்(எக்ஸ்-ஷோரூம்). இந்த முழு-எலக்ட்ரிக் SUV, புதுப்பிக்கப்பட்ட டாடா நெக்ஸான் EV-க்கு போட்டியாக வெளியாகி உள்ளது. மஹிந்திரா XUV400 ப்ரோக்கான முன்பதிவுகள் டோக்கன் தொகையான ரூ. 21,000க்கு செய்யப்படுகின்றன. இதற்கான டெலிவரிகள் பிப்ரவரி 1 முதல் தொடங்கும். மே 31 வரை செய்யப்படும் டெலிவரிகளுக்கு சிறப்பு அறிமுக விலை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 மஹிந்திரா XUV400 ப்ரோ ஆனது EC Pro மற்றும் EL Pro என இரண்டு பதிப்புகளில் கிடைக்கிறது.

கிங்க்ஸ்

மஹிந்திரா XUV400 ப்ரோவில் உள்ள வசதிகள் 

புதுப்பிக்கப்பட்ட இந்த மாடல் EVக்கள் டாஷ்போர்டுடன் புதிய கருப்பு மற்றும் சாம்பல் வண்ணத்தில் விற்கப்படுகிறது. சிறந்த EL Pro மாடலில் மிதக்கும் வகை 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் AdrenoX-இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன. வயர்லெஸ் சார்ஜர், இரட்டை-மண்டல காலநிலை கட்டுப்பாடு, புதுப்பிக்கப்பட்ட காலநிலை கட்டுப்பாட்டு பேனல் மற்றும் பின்புற பயணிகளுக்கான டைப்-சி USB போர்ட் ஆகியவையும் இதில் உள்ளன. 34.5kWh யூனிட் பேட்டரி பேக் மற்றும் 39.4kWh பேட்டரி பேக் என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளை 2024 XUV400 ப்ரோ வழங்குகிறது.