Page Loader
2023 யமஹா: புதிய அம்சங்களுடன் ஃபசினோ மற்றும் ரே ZR மாடல்கள் வெளியீடு
Yamaha Fascino மற்றும் RayZR, புதிய அம்சங்கள் அறிமுகம்

2023 யமஹா: புதிய அம்சங்களுடன் ஃபசினோ மற்றும் ரே ZR மாடல்கள் வெளியீடு

எழுதியவர் Siranjeevi
Feb 22, 2023
01:45 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா அதன் Fascino 125 Fi ஹைப்ரிட் மற்றும் Ray ZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர்களின் 2023 மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டுவாகனங்களும் புதிய வண்ணத்துடன் வெளிவந்துள்ளன. இதில் என்ஜின் திறனைக் கண்காணிக்க OBD-II சென்சார் உடன் வருகின்றன. யமஹாவின் 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் ரேஞ்சின் 2023 வெர்ஷன் இப்போது E20 எரிபொருள் எஞ்சினை கொண்டு வருகிறது. இந்த புதிய எஞ்சின் இப்போது OBD2 உடன் இணைந்துள்ளது. இந்த 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் ரேஞ்ச் யமஹாவின் புளூடூத் இயக்கப்பட்ட ஒய்-கனெக்ட் ஆப் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், யமஹா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒய்-கனெக்ட் ஆப், எரிபொருள் நுகர்வு டிராக்கர், மெயின்டனன்ஸ் ரெக்கமமெண்டேஷன்ஸ் வழங்கும்.

யமஹா நிறுவனம்

Yamaha Fascino மற்றும் RayZR, புதிய அம்சங்கள் என்னென்ன?

கடைசியாக பார்க்கிங் செய்யப்பட்ட இடம், ரெவ்ஸ் டாஷ்போர்டு, ரைடர் ரேங்கிங் போன்ற பல அம்சங்களை வழங்குகிறது. ஃபசினோ டிரம் (விவிட் ரெட், எல்லோ காக்டெயில், சியான் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக்) ரூ. 78 ஆயிரத்து 600 விலையில் கிடைக்கிறது. அதுவே, ஃபசினோ டிஸ்க் (கூல் புளூ மெட்டாலிக், டார்க் மேட் புளூ) ரூ. 89,230 க்கு கிடைக்கும். ரே ZR டிரம் (மெட்டாலிக் பிளாக், சியான் புளூ மற்றும் மேட் ரெட்) ரூ. 82,730க்கு கிடைக்கும். ரே ZR டிஸ்க் (சியான் புளூ, மேட் ரெட் மற்றும் மெட்டாலிக் பிளாக்) ரூ. 88,530க்கு கிடைக்கும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.