உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர்
இந்தியாவில் கொல்கத்தா பகுதியை சேர்ந்த ஓர் நபர் இருமல், சோர்வு, விழுங்குவதில் சிரமம், குரல் கரகரப்பு, பசியின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து 3 மாதங்களுக்குப்பிறகு அப்போலோ மருத்துவமனைக்கு சென்றதாக ஜர்னல் மெடிக்கல் மைகாலஜி கேஸ் ரிப்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது என்று கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனைக்கு அந்த நபர் உட்படுத்தப்பட்டப்பொழுது அவரது கழுத்தில் சிடிஸ்கேன் செய்துப்பார்த்துள்ளார்கள். அப்போது அவருக்கு பாராட்ராஷியல் சீழ் இருந்தது தெரியவந்துள்ளது. அதனை மருத்துவர்கள் WHO ஒத்துழைப்பு மையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதில் தாவரங்களில் வெள்ளிஇலை நோயினை ஏற்படுத்தும் பூஞ்சை-காண்ட்ரோஸ்டீரியம் பர்ப்யூரியத்தால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டறியப்பட்டது.
சுகாதார நிபுணர்களை எச்சரிக்கை செய்த தொற்று
காண்ட்ரோஸ்டீரியம் பர்ப்யூரியம் என்பது ஒரு தாவர பூஞ்சை. இது மனிதனுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவது இதுவே முதல் நிகழ்வு ஆகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், வரிசைப்படுத்துவதன் மூலம் இந்த அசாதாரண நோய்கிருமியின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியும். தாவர பூஞ்சை மனிதர்களை பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றிய அவர்களின் புரிதலை மீறியதால் இந்த தொற்று சுகாதார நிபுணர்களை தற்போது எச்சரிக்கை செய்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட அந்த 61 வயது நபர் 2 மாதங்களாக 2 பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை உட்கொண்டு பூரண குணமடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.