Page Loader
உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம்
தரவரிசை பட்டியலில் 13வது இடத்தை பிடித்த கோவை விமான நிலையம்

உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம்

எழுதியவர் Nivetha P
Jan 12, 2023
04:33 pm

செய்தி முன்னோட்டம்

விமான நிறுவனங்கள் மற்றும் நிலையங்களின் இயக்கத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் ஓஏஜி நிறுவனமானது உலகளவில் சரியான நேரத்தில் சேவையளிக்கும் விமான நிலையங்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து தரவரிசை பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, 20 இடங்கள் கொண்ட இந்த பட்டியலில் கோவை விமான நிலையம் 13வது இடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நேரம் தவறாமல் இயங்கும் 10 இடங்கள் கொண்ட விமான நிலையங்கள் பட்டியலில் கோவை விமான நிலையம் 10வது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓஏஜி என்னும் நிறுவனம் உலகளவில் பயண தகவல்களை அளிக்கும் நிறுவனமாகும்.

ஓடிபி

தரவரிசை பட்டியலில் 15வது இடத்தை பிடித்த இந்தியா 'இண்டிகோ' விமான நிறுவனம்

இதனை தொடர்ந்து நேரம் தவறாத விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் விமான நிறுவனமான 'இண்டிகோ' 83.51 சதவீத ஓடிபி பெற்று 15வது இடத்தில் உள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் இந்தோனேஷியாவின் 'கருடா' விமான நிறுவனம் 95.63 சதவீத ஓடிபியுடன் முதலிடத்தையும், சஃபைர் விமான நிறுவனம் 95.30 சதவீத ஓடிபி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்றும் தெரிகிறது. நேரம் தவறாமல் பயணிகளுக்கு சேவையளிக்கும் இந்த விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் பட்டியலில் இந்திய நிறுவனமான 'இண்டிகோ' விமான நிறுவனமும், விமான நிலையங்களில் கோவை விமான நிலையம் மட்டுமே இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.