LOADING...
உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் 2026: அனைவரும் உற்று நோக்கிய டிரம்ப்பின் உரை விவரங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று டாவோஸ் வந்தடைந்தார்

உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் 2026: அனைவரும் உற்று நோக்கிய டிரம்ப்பின் உரை விவரங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 21, 2026
07:29 pm

செய்தி முன்னோட்டம்

WEF 2026-ஆம் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று டாவோஸ் வந்தடைந்தார். அங்கே, உலக தலைவர்கள் மற்றும் வணிக நிர்வாகிகளை உரையாற்றும்போது, ​​அமெரிக்க பொருளாதாரத்தின் செயல்திறனை பாராட்டி, வளர்ச்சி, வலிமை மற்றும் உள்நாட்டுப் பொருளாதார முன்னுரிமைகளை எடுத்துரைத்து தனது கருத்துக்களைத் தொடங்கினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது வழக்கமான அதிரடி பாணியில் 'நண்பர்களுக்கும் ஒரு சில எதிரிகளுக்கும்' வணக்கம் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார். அமெரிக்க வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை தனது நிர்வாகம் வழங்கி வருவதாகவும், வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத பொருளாதார வளர்ச்சியை உறுதியளித்ததாகவும் டிரம்ப் கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

உரை

கிரீன்லாந்து விவகாரம் - 'அன்பு அல்லது அதிகாரம்'

"கிரீன்லாந்து என்பது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு இடையில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் ஒரு பிரம்மாண்டமான பகுதி. அமெரிக்காவால் மட்டுமே அந்த நிலப்பரப்பைப் பாதுகாக்க முடியும். எனவே, கிரீன்லாந்தை இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை நான் உடனடியாகத் தொடங்க விரும்புகிறேன்". "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு அறங்காவலராக எங்களிடமே இருந்த நிலத்தை நாங்கள் டென்மார்க்கிடம் திருப்பிக் கொடுத்தோம். இப்போது அதை மீண்டும் கேட்கிறோம்". "இதற்கு நீங்கள் 'யெஸ்' சொன்னால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்; 'நோ' சொன்னால் அதை நாங்கள் நினைவில் வைத்திருப்போம் (We will remember)," என்று பகிரங்கமாக எச்சரித்தார்.

Advertisement

அமெரிக்கா

அமெரிக்காவின் பொருளாதார வலிமை

"பைடன் ஆட்சியில் அமெரிக்கா பொருளாதாரச் சரிவை சந்தித்தது. ஆனால் எனது ஓராண்டு ஆட்சிக் காலத்தில் பணவீக்கம் குறைந்து, அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது". "அமெரிக்கா என்பது இந்தப் பூமியின் பொருளாதார எஞ்சின். அமெரிக்கா செழித்தால் மட்டுமே ஒட்டுமொத்த உலகமும் செழிக்கும்," என்று பெருமிதம் கொண்டார்.

Advertisement

உறவு

சர்வதேச நாடுகளுடன் உறவுகள்

அமெரிக்கா யாரிடமும் எதையும் கேட்பதில்லை, ஆனால் தேவைப்பட்டால் எதனாலும் தடுக்க முடியாத வலிமையைப் (Unstoppable force) பயன்படுத்தத் தயங்க மாட்டோம் என்றும், இருப்பினும் அமைதி வழியிலேயே கிரீன்லாந்து விவகாரத்தைத் தீர்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். ட்ரம்பின் இந்த "ஒன்று 'யெஸ்' அல்லது 'நோ'" பாணி எச்சரிக்கை, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement