துருக்கி பூகம்ப இடிபாடுகளில் இருந்து 128 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்ட குழந்தை
துருக்கியின் அன்டாக்யாவில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இரண்டு மாத குழந்தை ஒன்று நேற்று(பிப் 12), அதாவது கிட்டத்தட்ட 128 மணி நேரத்திற்குப் பிறகு, மீட்கப்பட்டது. முகத்தில் தூசி மற்றும் அழுக்கு படிந்த அந்த குழந்தையின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவியது. அதன்பிறகு, இன்று ஒரு வீடியோ வெளிவந்திருக்கிறது. இந்த வீடியோவில் அதே குழந்தை குளித்து உணவு உண்டதற்கு பின் பளிச்சென்று சிரித்துக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த இணைவாசிகள் சந்தோசமான-சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இவ்வளவு நடந்தும் எதுவுமே நடக்காதது போல் அழகாக சிரிக்கும் அந்த குழந்தையிடம் இருந்து அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை. துருக்கியில் 31,643 பேரும், சிரியாவில் 3,581 பேரும் உயிரிழந்துள்ளனர். எனவே, மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.