LOADING...
இந்தியா -பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்படுமென அமெரிக்க ஆய்வு மையம் கணிப்பு
ஆயுதமேந்திய மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த CFR ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

இந்தியா -பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்படுமென அமெரிக்க ஆய்வு மையம் கணிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 30, 2025
04:56 pm

செய்தி முன்னோட்டம்

2026-ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மீண்டும் ஆயுதமேந்திய மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த 'கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ்' (CFR) எனும் புகழ்பெற்ற ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாதச் செயல்கள் காரணமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுவதற்கு "மிதமான வாய்ப்பு" இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. கடந்த மே மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு 'போர்' சூழல் ஏற்பட்டதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் பதற்றம்

எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையேயும் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல்கள் சர்வதேச அளவில் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளில் நடுத்தர அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க வெளியுறவு கொள்கை நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த குளிர்காலத்தில் மட்டும் ஜம்மு பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அமெரிக்காவின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement