விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வருவார் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வருவார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று அறிவித்தார். இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். "ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இந்தியப் பயணத்தின் குறிப்பிட்ட தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும், ரஷ்யா அதற்கான ஆயத்தத்தைத் தொடங்கும்" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். "அவரது பயணத்தின் துல்லியமான தேதிகளை விரைவில் உறுதிப்படுத்துவோம் என்று நம்புகிறேன்... நிச்சயமாக, பிரதமர் மோடியின் இரண்டு முறை ரஷ்யாவுக்குப் பிறகு, இப்போது ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தை நாங்கள் முடிவெடுத்துளோம். எனவே நாங்கள் அதை எதிர்நோக்குகிறோம். ," என்று அவர் மேலும் கூறினார்.
Twitter Post
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட புடின்
உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்காக விளாடிமிர் புடின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) கைது வாரண்டின் கீழ் உள்ளார். மார்ச் 2023இல், மோதல் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, புடின் மற்றும் ரஷ்யாவின் குழந்தை உரிமைகளுக்கான ஆணையரான மரியா லவோவா-பெலோவா ஆகிய இருவருக்குமே போர்க் குற்றங்களுக்காக ICC கைது வாரண்ட்களை பிறப்பித்தது. ரோம் சட்டத்தின் கீழ், நீதிமன்றத்தின் பிணைப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஐசிசியின் ஏதேனும் ஒரு உறுப்பு நாட்டிற்கு அந்த குற்றவாளி நபர் சென்றால், அவர்கள் தடுத்து வைக்கப்பட வேண்டும். இருப்பினும், ரோம் சட்டதிட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை அல்லது அங்கீகரிக்கவில்லை. எனவே, ரஷ்யா அதிபரை இந்தியாவில் வைத்து கைது செய்ய முடியாது.
ரஷ்யா-உக்ரைன் போரில் இந்திய இரு நாடுகளுக்கும் ஆதரவாகவே இருந்துள்ளது
ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில், மாஸ்கோவிற்கு எதிராக வாக்களிப்பதில் இருந்து இந்தியா பலமுறை புறக்கணித்துள்ளது. கூடுதலாக, அது ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெயை வாங்குகிறது, இது அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் எரிச்சலை அதிகரிக்கிறது. அதோடு, பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) நாடுகளின் தலைவர்களின் வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் ரஷ்யாவின் கசான் நகருக்குச் சென்றார். உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் இருதரப்பு சந்திப்பை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.