கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடமே கொடுக்க வேண்டும்: அனல் பறக்கும் விவாதம்
செய்தி முன்னோட்டம்
கோஹினூர் வைரம் மற்றும் அதன் வரலாறு பற்றி இங்கிலாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சூடான விவாதம் நிகழ்ந்தது.
மே மாதம் நடைபெறும் பிரிட்டன் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில், கோஹினூர் பொறிக்கப்பட்ட கிரீடத்தை ராணி கமிலா அணிய மாட்டார் என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிக்கையாளரான நரிந்தர் கவுர், வைரத்தின் சர்ச்சைக்குரிய வரலாற்றை சுட்டிக்காட்டியபோது ஒளிபரப்பாளர் எம்மா அதை எதிர்த்து வாதாடினார்.
கோஹினூர் இந்தியாவைச் சேர்ந்தது என்றும், அதை இந்தியாவுக்கே திருப்பித் தர வேண்டும் என்றும் நரீந்தர் கவுர் அந்த நிகழ்ச்சியில் முழக்கமிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலான கோஹினூர் வைரத்தின் வீடியோவை பகிர்ந்த நரீந்தர் கவுர்
The kohinoor diamond was founded in Indian soil. It represents to the British their dark brutal colonial history. They have NO BUSINESS in continuing to benefit from colonisation. The UN recognises the right of a country to reclaim its treasures. https://t.co/uL3FfoqvzC
— Narinder Kaur (@narindertweets) February 16, 2023