வீடியோ: ஜப்பான் நகரத்தை தாக்கியது இந்த ஆண்டின் முதல் சுனாமி
ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி மாலை 4:10 மணியளவில் இஷிகாவா மாகாணத்தில் உள்ள நோட்டோ பகுதியைத் தாக்கிய நிலநடுக்கம், அப்பகுதியில் சுனாமியை தூண்டியுள்ளது. அதனால், கடலோர மக்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டொயாமா மாகாணத்தில் உள்ள டொயாமா நகரைத் தாக்கிய சுனாமியின் முதல் அலைகளைக் காட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. எனினும், இந்த வீடியோக்களின் உண்மைத்தன்மையை Newsbytesஆல் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. வைரல்கும் அந்த வீடியோ காட்சிகளை இப்போது பார்க்கலாம்.