NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இனி விசாவுக்கு அலைய வேண்டியதில்லை; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இனி விசாவுக்கு அலைய வேண்டியதில்லை; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்!
    இனி அமெரிக்க விசாவுக்கு அலைய வேண்டியதில்லை

    இனி விசாவுக்கு அலைய வேண்டியதில்லை; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 19, 2023
    03:14 pm

    செய்தி முன்னோட்டம்

    எச்-1பி விசா வைத்திருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், நாட்டை விட்டு வெளியேறாமல் விசாவை புதுப்பிக்கும் திட்டத்திற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த திட்டம் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களை இனி நாட்டை விட்டு வெளியேறாமல் தங்கள் விசாவைப் புதுப்பிக்க அனுமதிக்கும்.

    முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் சோதனை அடிப்படையில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான வெள்ளை மாளிகை அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது.

    இதையடுத்து திட்டம் ஜனவரி 2024இல் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக வெளியான தகவல்களின்படி, திட்டத்தின் முதல் தொகுப்பில், சுமார் 20,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் எச்-1பி விசாக்களை புதுப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    US to allow 20000 H1B Visa holders to renew visa in US itself

    ஊழியர்களுக்கு மட்டுமே திட்டம் பொருந்தும்

    இந்த திட்டம் குறித்த கூடுதல் விபரங்கள் இன்னும் அமெரிக்க வெளியுறவுத் துறையால் பகிரப்படவில்லை என்றாலும், இந்த விசா புதுப்பித்தல் திட்டம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்படுகிறது.

    ஊழியர்களுடன் தங்கியுள்ள அவர்களது வாழ்க்கைத் துணைவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என்றும், அவர்கள் தங்கள் விசாக்களை புதுப்பிக்க சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனவரி 2024 இல் திட்டம் தொடங்கப்பட்டதும், எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தங்கள் புதுப்பித்தல் விண்ணப்பங்களை வெளியுறவுத் துறைக்கு அனுப்ப வேண்டும்.

    விசா விண்ணப்ப செயல்முறையின் போது, ஊழியர்கள் வெளிநாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    இந்த திட்டத்தின் மூலம், வெளிநாட்டு ஊழியர்களின் விசா புதுப்பித்தல் செயல்முறையை துரிதப்படுத்த முடியும் என அமெரிக்கா நம்புகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    விசா
    இந்தியர்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    அமெரிக்கா

    அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது  இந்தியா
    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன? இந்தியா
    'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன் இஸ்ரேல்
    எக்ஸில் இனி விளம்பரம் செய்வதில்லை என முடிவெடுத்த வால்மார்ட், ஏன்? எக்ஸ்

    விசா

    அமெரிக்கா விசாவில் இஸ்ரேலியர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா
    கனடாவில், குறிப்பிட்ட விசா சேவைகளை நாளை மீண்டும் தொடங்குகிறது இந்தியா  கனடா
    புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை அமெரிக்கா
    கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா கனடா

    இந்தியர்கள்

    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை அமெரிக்கா
    ஐக்கிய ராஜ்யத்தின் சர்வதேச மாணவர்களின் சார்பு கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா? இங்கிலாந்து
    ஜனவரி 2024 முதல் அனைவருக்கும் இலவச விசா வழங்கும் கென்யா விசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025