Page Loader
ஜஸ்ட் ஒரு மைல்தான் வெள்ளைமாளிகை; அருகில் இருந்தும் மகள் கமலா ஹாரிஸை ஒருமுறை கூட பார்க்காத தந்தை
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தந்தை

ஜஸ்ட் ஒரு மைல்தான் வெள்ளைமாளிகை; அருகில் இருந்தும் மகள் கமலா ஹாரிஸை ஒருமுறை கூட பார்க்காத தந்தை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2024
06:52 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கமலா ஹாரிஸுக்கு 86 வயதான தந்தை டொனால்ட் ஜே ஹாரிஸுடனான உறவு மோசமாக உள்ள தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் வாழ்ந்தாலும், அவரது தந்தை கடந்த 4 வருடத்தில் ஒருமுறை கூட மகளை பார்க்க செல்லவில்லை. அமெரிக்கத் துணை ஜனாதிபதி தற்போது உள்ள கமலா ஹாரிஸ் வெள்ளை மாளிகையில் வசிக்கவில்லை என்றாலும், அங்கே ஒரு அலுவலகம் உள்ளது. துணை ஜனாதிபதியின் அலுவலகம் ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் உள்ளது. இது வெள்ளை மாளிகை வளாகத்தில் வெஸ்ட் விங்கிற்கு அடுத்ததாக அமைந்துள்ளது.

தந்தை

தந்தை டொனால்ட் ஜே ஹாரிஸின் பின்னணி

கமலா ஹாரிஸின் தந்தை டொனால்ட் ஜே ஹாரிஸ் ஒரு ஓய்வுபெற்ற ஸ்டான்போர்ட் பேராசிரியர் ஆவார். மார்க்சிஸ்ட் சார்பு கொண்டவர் மற்றும் கமலாவிடமிருந்து விலகியே உள்ளார். கடந்த காலத்தில் கமலா ஹாரிஸின் கருத்துக்களை விமர்சித்தார் மற்றும் அவரைச் சுற்றியுள்ள அரசியல் உலகத்தை "ஹல்பலூ" என்று விவரித்தார். ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் தனது உரையில், கமலா ஹாரிஸ் தந்தையுடனான உறவை "நெருக்கமில்லை" என்று விவரித்தார். நிகழ்வில் அவரது தந்தை இல்லாதது குறிப்பிடத்தக்கது. கமலா தனது தந்தையின் அச்சமற்ற தன்மையால் ஊக்கம் பெற்றதாக குறிப்பிட்டார். எனினும், பெரும்பாலும் தங்களை வளர்த்தது அம்மாதான் என்று கூறினார். ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் கமலா ஹாரிஸின் வளர்ப்புப் பிள்ளைகள், கணவர் டக்ளஸ் உட்பட மிகப்பெரிய பட்டாளமே இருந்தது குறிப்பிடத்தக்கது.