LOADING...
ஏலியன் ரகசியங்களை உடைக்கும் டிரம்ப்! UFO கோப்புகளை வெளியிட அதிரடி உத்தரவு
UFO-க்கள் தொடர்பான அனைத்து ரகசிய ஆவணங்களையும் வெளியிட டிரம்ப் உத்தரவு pc: representative image

ஏலியன் ரகசியங்களை உடைக்கும் டிரம்ப்! UFO கோப்புகளை வெளியிட அதிரடி உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2026
08:57 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ஏலியன்கள் மற்றும் UFO-க்கள் தொடர்பான அனைத்து ரகசிய ஆவணங்களையும் கண்டறிந்து பொதுமக்களுக்கு வெளியிடுமாறு பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மற்றும் பிற ஏஜென்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ஒரு போட்காஸ்ட் நேர்காணலில், "ஏலியன்கள் நிஜம்" என்று கூறியதுடன், பிரபஞ்சத்தின் பரப்பளவை கருத்தில் கொண்டால் வேறு எங்கும் உயிர் இருக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். ஒபாமாவின் இந்த கருத்துக்கள் ரகசிய தகவல்களை வெளியிடும் செயல் என்று விமர்சித்த டிரம்ப், "அவர் ஒரு பெரிய தவறு செய்துவிட்டார், நான் அந்த ஆவணங்களை அதிகாரப்பூர்வமாக 'Declassify' செய்து அவரை சிக்கலில் இருந்து காப்பாற்றுகிறேன்" என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement