LOADING...
ஈரான் போர் குறித்து டிரம்ப் ஏமாற்றப்படுகிறாரா? துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் எழுப்பியுள்ள பகீர் சந்தேகம்
போரின் உண்மையான நிலவரம் குறித்து வேன்ஸ் தனிப்பட்ட முறையில் கவலை தெரிவித்துள்ளார்

ஈரான் போர் குறித்து டிரம்ப் ஏமாற்றப்படுகிறாரா? துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் எழுப்பியுள்ள பகீர் சந்தேகம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 29, 2026
11:35 am

செய்தி முன்னோட்டம்

ஈரான் உடனான போர் எட்டாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு போரின் உண்மையான நிலவரம் குறித்து முழுமையான தகவல்கள் சென்றடைகிறதா என்ற கேள்வியை துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் எழுப்பியுள்ளார். 'தி அட்லாண்டிக்' இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போர்க்கள நிலைமை குறித்துப் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள் அதிபரிடம் மிகைப்படுத்தப்பட்ட நேர்மறையான தகவல்களைப் பகிரக்கூடும் என வேன்ஸ் தனிப்பட்ட முறையில் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் கூட்டுப் படைத் தளபதி டான் கெய்ன் ஆகியோர், ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கப் படைகள் பெரும் வெற்றி பெற்று வருவதாகவும், ஈரானின் ராணுவ பலம் சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் பொதுவெளியில் கூறி வருகின்றனர். ஆனால், ஜே.டி. வேன்ஸ் இதனை சந்தேகிக்கிறார்

கவலை

அரசுத் தரப்பு வாதம் vs வேன்ஸின் கவலை

தொடர்ச்சியான போரினால் அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்பு குறைந்து வருவதாக வேன்ஸ் அஞ்சுகிறார். இது எதிர்காலத்தில் சீனா, வடகொரியா அல்லது ரஷ்யாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க அமெரிக்காவுக்குச் சவாலாக அமையலாம் என்பது அவரது வாதம். ஈரானின் வான்பரப்பு முழுமையாக அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், ஈரானிடம் இன்னும் கணிசமான ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கடற்படை பலம் இருப்பதாகs புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் தொடர்பு

தகவல் தொடர்பில் உண்மை மறைக்கப்படுகிறதா

பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஒரு முன்னாள் ஊடகவியலாளர் என்பதால், அதிபர் டிரம்பிற்கு பிடித்தமான பாணியில் தகவல்களை தெளிவாகவும் நம்பிக்கையுடனும் முன்வைப்பதில் அவர் வல்லவர். "டிரம்பிற்கு என்ன பிடிக்கும், அவர் எப்படிச் சிந்திப்பார் என்பது ஹெக்செத்திற்கு நன்றாகத் தெரியும்" என அதிகாரிகள் கூறுகின்றனர். இத்தகைய தகவல் தொடர்பு முறை போரின் அபாயகரமான பக்கங்களை மறைத்து, வெற்றிகளை மட்டும் முன்னிலைப்படுத்துகிறதா என்ற ஐயம் தற்போது எழுந்துள்ளது.

Advertisement

அணுகுமுறை

உள்நாட்டு மோதலை தவிர்க்கும் அணுகுமுறை

ஜே.டி. வேன்ஸ் தனது கவலைகளை மிகவும் கவனமாகக் கையாண்டு வருகிறார். ஹெக்செத் அல்லது கெய்ன் மீது நேரடிப் புகார்களை அடுக்காமல், தனது தனிப்பட்ட சந்தேகங்களாகவே இவற்றை முன்வைக்கிறார். இது நிர்வாகத்திற்குள் பிளவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க அவர் எடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் சிறிய படகுகள் இன்னும் அச்சுறுத்தலாகவே இருக்கும் நிலையில், வேன்ஸின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement