இஸ்லாமாபாத்தில் தொடங்கும் அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை! கோட்டை போல மாறிய நகரம்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, ஏப்ரல் 11 முதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தையை ஏற்று நடத்த பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு, இஸ்லாமாபாத் நகரம் தற்போது ஒரு பாதுகாப்பு அரணாக மாற்றப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள 'ரெட் ஜோன்' பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் ஆயுதமேந்திய காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், முக்கிய அரசு அலுவலகங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் ஹோட்டல்கள் அமைந்துள்ள இந்த பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | Pakistan | Blocked roads leading up to Islamabad’s red zone, home to Parliament, key Government installations, luxury hotels, embassies and the offices of foreign organisations, as the Pakistani capital gears up to host the U.S. and Iran for peace talks: Reuters
— ANI (@ANI) April 10, 2026
(Video… pic.twitter.com/NxVomxDfi6
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | Pakistan: Islamabad declared a two-day public holiday ahead of expected U.S.–Iran talks, as authorities implemented strict security measures to decrease human activity in the city. Police set up checkpoints across the city on Thursday (April 9), especially around the Red… pic.twitter.com/LN599saPBr
— ANI (@ANI) April 10, 2026
விடுமுறை
சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் விடுமுறை
பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்ய, அமெரிக்காவிலிருந்து 30 பேர் கொண்ட முன்னேற்பாட்டுக் குழு ஏற்கனவே இஸ்லாமாபாத் வந்தடைந்துள்ளது. மக்களின் நடமாட்டத்தைக் குறைப்பதற்காக, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடைகள் மூடப்பட்டு, நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் எளிதாகப் பயணம் செய்ய வசதியாக, பாகிஸ்தான் அரசு 'விசா ஆன் அரைவல்' வசதியை அறிவித்துள்ளது. விமான நிலையங்களில் இதற்காக பிரத்யேக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.