அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மீண்டும் சாத்தியமா? ஈரான் தரப்பு கூறுவது என்ன?
செய்தி முன்னோட்டம்
சர்வதேச அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்' இறுதி நேரத்தில் முறிந்திருப்பது மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிலான உயர்மட்ட நேரடிப் பேச்சுவார்த்தை வெற்றிபெற சில அங்குலங்களே இருந்த நிலையில், அமெரிக்காவின் கடைசி நிமிட நிபந்தனைகளால் அது தோல்வியடைந்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஒப்பந்தம்
இஸ்லாமாபாத் ஒப்பந்தம் முறிந்த பின்னணி
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தனது ஏமாற்றத்தை எக்ஸ் (X) தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தில் அமெரிக்கா தனது இலக்குகளை மாற்றியதோடு, புதிய தடைகளை முன்வைத்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "நல்லெண்ணம் நல்லெண்ணத்தை ஈர்க்கும்; பகையுணர்வு பகையுணர்வையே வளர்க்கும்" என்ற எச்சரிக்கையோடு அவர் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
நிலைப்பாடு
ஈரானின் ராஜதந்திர நிலைப்பாடும் நிபந்தனையும்
ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் இது குறித்துப் பேசுகையில், அமெரிக்கா தனது ஆதிக்கப் போக்கைக் கைவிட்டு, ஈரானிய தேசத்தின் உரிமைகளை மதித்தால் மட்டுமே பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். ஈரானிய தூதுக்குழுவினர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோரின் முயற்சிகளை அவர் பாராட்டியுள்ளார். ஒப்பந்தம் கைநழுவிப் போனாலும், அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொண்டால் எதிர்காலத்தில் ராஜதந்திர ரீதியான தீர்வு சாத்தியம் என்பதையே ஈரானின் இந்தத் கருத்துகள் உணர்த்துகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
In intensive talks at highest level in 47 years, Iran engaged with U.S in good faith to end war.
— Seyed Abbas Araghchi (@araghchi) April 12, 2026
But when just inches away from "Islamabad MoU", we encountered maximalism, shifting goalposts, and blockade.
Zero lessons earned
Good will begets good will.
Enmity begets enmity.
அமெரிக்கா
அமெரிக்காவின் அதிரடித் தடை மற்றும் செண்ட்காம் எச்சரிக்கை
பேச்சுவார்த்தை முறிந்த அதே வேளையில், அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) ஈரானியத் துறைமுகங்கள் மீது கடுமையான கடல்வழித் தடையை (Blockade) அறிவித்துள்ளது. ஏப்ரல் 13, திங்கட்கிழமை காலை 10 மணி (இந்திய நேரப்படி இரவு 7:30 மணி) முதல் ஈரானின் அனைத்துத் துறைமுகங்களுக்குள்ளும் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் உள்ள அனைத்துத் துறைமுகங்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.