LOADING...
2 வார போர் நிறுத்தத்தின்போது, ஹார்முஸ் நீரிணை வழி செல்லும் கப்பலுக்கு வரிவிதிக்க ஈரானும், ஓமனும் திட்டம்?
ஹார்முஸ் நீரிணை வழி செல்லும் கப்பலுக்கு வரிவிதிக்க ஈரானும், ஓமனும் திட்டம்

2 வார போர் நிறுத்தத்தின்போது, ஹார்முஸ் நீரிணை வழி செல்லும் கப்பலுக்கு வரிவிதிக்க ஈரானும், ஓமனும் திட்டம்?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 08, 2026
09:43 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தம், மத்திய கிழக்கில் நிலவி வந்த ஏவுகணை தாக்குதல்களுக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஈரான் வழங்கிய 10 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இந்த ராஜதந்திர நகர்வு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.News18 செய்தியின்படி, புதிய போர்நிறுத்தக் கட்டமைப்பின் கீழ், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து ஈரான் 2 மில்லியன் டாலர் கட்டணம் வசூலிக்கும்.

நிபந்தனைகள்

ஈரானின் 10 முக்கிய நிபந்தனைகள்

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் மத்தியஸ்தத்துடன் வழங்கப்பட்ட ஈரானின் 10 அம்சத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நிபந்தனைகள் பின்வருமாறு: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பரஸ்பரம் ஆக்கிரமிப்பு செய்யாத ஒப்பந்தம் (Non-aggression pact). ஹார்முஸ் நீரிணையின் முழுக் கட்டுப்பாடு ஈரானிடமே நீடிக்க வேண்டும். ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்கா விதித்துள்ள அனைத்து நேரடி மற்றும் மறைமுகப் பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும். போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய கிழக்குப் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் போர் விமானங்களையும் படைகளையும் வெளியேற்ற வேண்டும்.

கட்டண முறை

ஹார்முஸ் நீரிணையில் புதிய கட்டண முறை

சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி இதுவரை ஒரு சர்வதேச நீர் வழியாகக் கருதப்பட்டு வந்த ஹார்முஸ் நீரிணையில், எந்த நாடும் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிக உடன்படிக்கையின்படி, ஈரான் மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளும் தங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 28 முதல் முடங்கிக் கிடந்த இந்த நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈடாக இந்த நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மறுசீரமைப்புப் பணிகள்

போருக்கு பிந்தைய மறுசீரமைப்புப் பணிகள்

கடந்த 40 நாட்களாக நீடித்த போரினால் ஈரானின் பாதுகாப்பு, நிர்வாகம் மற்றும் சிவில் உள்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்தக் கட்டண வசூல் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு, போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை மறுசீரமைப்பு (Post-war reconstruction) செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெஹ்ரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை தீர்மானிக்கும் இந்த வழித்தடத்தில் வசூலிக்கப்படும் கட்டணம், ஈரானின் பொருளாதார மீட்சிக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

நிலைப்பாடு

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையும் ட்ரம்ப்பின் நிலைப்பாடும்

இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, நிரந்தர அமைதி மற்றும் ஹார்முஸ் நீரிணையின் எதிர்கால மேலாண்மை குறித்த விரிவான பேச்சுவார்த்தைகள் வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்க உள்ளன. இதில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். ஈரானின் 10 அம்சத் திட்டத்தைச் "செயல்படுத்தக்கூடிய அடிப்படை நிபந்தனைகள்" என்று வர்ணித்துள்ள அதிபர் ட்ரம்ப், இந்த இரண்டு வார கால இடைவெளியில் ஒரு இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement