NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனாவின் வுஹான் கல்வி நிறுவனத்திற்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனாவின் வுஹான் கல்வி நிறுவனத்திற்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா

    சீனாவின் வுஹான் கல்வி நிறுவனத்திற்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா

    எழுதியவர் Sindhuja SM
    Jul 19, 2023
    01:40 pm

    செய்தி முன்னோட்டம்

    முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவின் வுஹான் நகரில் உள்ள வுஹான் கல்வி நிறுவனத்திற்கான நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

    பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி ஆய்வகம் வழங்கத் தவறியதால், அமெரிக்காவின் நிதியுதவியை ஜோ பைடன் நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

    கடந்த செப்டம்பரில் தொடங்கிய மறுஆய்வுக்குப் பிறகு, நிதியுதவியை நிரந்தரமாக நிறுத்த முயல்வதாக அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

    வுஹானில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி, அமெரிக்க கூட்டாட்சி விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சஜிவ்

     சீனாவின் ஆராய்ச்சிகளுக்கு எதிராக அமெரிக்கா எடுத்திருக்கும் மிகப்பெரிய நடவடிக்கை 

    ஜூலை 2020 முதலே இந்த ஆய்வகத்திற்கு அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்திடமிருந்து எந்த வகையான நிதியுதவியும் அனுப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    கொரோனாவின் தோற்றம் குறித்து ஆய்வு செய்யபட்டு வரும் நிலையில், சீனாவின் பயோ-ஆராய்ச்சிகளுக்கு எதிராக அமெரிக்கா எடுத்திருக்கும் மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும்.

    கொரோனா பரவ தொடங்கிய காலகட்டத்தில், இந்த வுஹான் கல்வி நிறுவனத்தில் இருந்து தான் அது பரவி இருக்க வேண்டும் என்று பலதரப்பினரும் கூறினர்.

    ஆனால், இதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், கொரோனா மிருகங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவ தொடங்கியதா அல்லது ஆய்வங்களில் ஏற்பட்ட விபத்துகளில் மூலம் பரவ தொடங்கியதா என்பதை பல நாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன.

    இதற்கிடையில், சீனா வேண்டுமென்றே இந்த வைரஸை பரப்பியதாகவும் கூறப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    அமெரிக்கா
    கொரோனா
    உலகம்

    சமீபத்திய

    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா

    சீனா

    புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.. என்னென்ன வசதிகள்?  சியோமி
    நிலவில் நிரந்தரக் கட்டுமானம்.. சீனாவின் திட்டம் என்ன?  உலகம்
    ஆசிய விளையாட்டு போட்டியை தவிர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி : காரணம் என்ன? கிரிக்கெட்
    BYD-யின் புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்.. என்னென்ன வசதிகள்?  புதிய வாகனம் அறிமுகம்

    அமெரிக்கா

    வட அட்லாண்டிக் கடலில் காணாமல் போன நீர்மூழ்கியைத் தேடும் பணிகள் தீவிரம் உலகம்
    அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    புதிதாக 200 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் உபர் நிறுவனம் வணிகம்
    இந்தியாவிற்கு புதிய ராணுவ தளவாடங்களை வழங்கவிருக்கும் அமெரிக்கா பிரதமர் மோடி

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 288 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 267 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 174 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 124 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா

    உலகம்

    உலக UFO தினம்: இந்தப் பேரண்டத்தில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோமா? விண்வெளி
    பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம்  பிரான்ஸ்
    போர் விமான இயந்திரங்களை தயாரிக்க இந்தியாவுடன் இணைந்தது பிரான்ஸ்  பிரான்ஸ்
    உலக பிரியாணி தினம்: இந்தியாவின் பிரபலமான பிரியாணி வகைகள்  உணவு குறிப்புகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025