செப்டம்பர் 3ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்தது அமெரிக்காவின் லூயிஸ்வில்லே
திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் காங்கிரஸின் பிரியங்க் கார்கே ஆகியோரின் சனாதன தர்மக் கருத்துக்களால் இந்தியாவில் ஒரு பெரும் சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரு நகரம் செப்டம்பர் 3 ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி நகர மேயர் செப்டம்பர் 3ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்துள்ளார். லூயிஸ்வில்லேயில் உள்ள கென்டக்கி இந்து கோவிலில் நடந்த மகா கும்பா அபிஷேக கொண்டாட்டத்தின் போது, மேயர் கிரேக் கிரீன்பெர்க் சார்பாக துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித் இதற்கான அதிகாரப்பூர்வ பிரகடனத்தை வாசித்தார்.
உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களால் ஏற்பட்ட சர்ச்சை
இந்நிகழ்ச்சியில் ஆன்மிக தலைவர்களான சித்தானந்த சரஸ்வதி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பகவதி சரஸ்வதி, பர்மார்த் நிகேதன் தலைவர் ரிஷிகேஷ், துணை நிலை ஆளுநர் ஜாக்குலின் கோல்மன், துணை முதல்வர் கெய்ஷா டோர்சி மற்றும் பல ஆன்மிக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கடந்த சனிக்கிழமை, சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசிய உதயநிதி, அதை மொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.