LOADING...
அமெரிக்கா செல்ல திட்டமிடுவோருக்கு குட் நியூஸ்! புதிய அமெரிக்கா ஃபர்ஸ்ட் விசா திட்டத்தை அறிமுகம் செய்தது அமெரிக்கா
அமெரிக்காவின் புதிய அமெரிக்கா ஃபர்ஸ்ட் விசா திட்டம் அறிமுகம்

அமெரிக்கா செல்ல திட்டமிடுவோருக்கு குட் நியூஸ்! புதிய அமெரிக்கா ஃபர்ஸ்ட் விசா திட்டத்தை அறிமுகம் செய்தது அமெரிக்கா

எழுதியவர் Sekar Chinnappan
May 23, 2026
07:17 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவிற்கு 4 நாள் அரசுமுறைப் பயணமாக வருகை தந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வணிக வல்லுநர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய அமெரிக்கா ஃபர்ஸ்ட் விசா திட்டத்தை (America First Visa Schedule) அறிமுகப்படுத்தியுள்ளார். டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஆதரவு இணைப்புச் செயலகக் கட்டிடத்தை (US Embassy Support Annex Building) திறந்து வைத்த பிறகு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

திட்டத்தின் நோக்கம்

அமெரிக்கா ஃபர்ஸ்ட் விசா திட்டத்தின் நோக்கம்

இந்த புதிய விசா திட்டமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் வணிக வல்லுநர்களுக்கு (Business Professionals) விசா வழங்குவதில் முன்னுரிமை அளிக்கும். இந்திய நிறுவனங்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் சுமார் 20.5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள நிலையில், இருநாட்டு வர்த்தகத்தை மேலும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள புதிய தூதரக வசதி மூலம் விசா விண்ணப்பங்கள் மற்றும் தூதரகப் பணிகள் முன்னெப்போதையும் விட மிகவும் துல்லியமாகவும், வேகமாகவும், குறைந்த செலவிலும் திறம்படக் கையாளப்படும் என்று ரூபியோ தெரிவித்தார்.

நட்பு

டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி இடையிலான நட்பு

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மார்கோ ரூபியோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட நட்புறவு மிகவும் ஆழமானது என்று குறிப்பிட்டார். டிரம்பின் முதல் அதிபர் பதவிக் காலத்திலேயே தொடங்கிய இந்த நட்பு, தற்போது அவரது இரண்டாவது பதவிக் காலத்திலும் தொடர்வதாகவும், இரு தலைவர்களும் குறுகிய கால நலன்களைத் தாண்டி நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்துவதாகவும் அவர் பாராட்டினார். மேலும், அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்பில் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு அதிகாரப்பூர்வ அழைப்பையும் அவர் முறைப்படி வழங்கினார்.

Advertisement

இந்தியாவின் முக்கியத்துவம்

இந்தோ-பசிபிக் உத்தியில் இந்தியாவின் முக்கியப் பங்கு

அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்தியக் கொள்கையின் மிக முக்கிய அடித்தளமாக இந்தியா விளங்குவதாக வெளியுறவு அமைச்சர் ரூபியோ சுட்டிக்காட்டினார். தான் அமெரிக்க வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பங்கேற்ற முதல் அதிகாரப்பூர்வக் கூட்டமே குவாட் கூட்டமைப்பு தான் என்றும், தற்போது அதன் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை டெல்லியில் கூட்டுவது இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் முக்கியத்துவத்தின் அடையாளம் என்றும் அவர் கூறினார். சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்திற்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம், மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பக் கூட்டுறவு ஆகியவை உலகளாவிய நன்மைக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் இச்சந்திப்பின் போது உறுதிபடத் தெரிவித்தார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement