LOADING...
அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரிட்டன்! ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதி மறுப்பு
அமெரிக்கா விடுத்த கோரிக்கையை பிரிட்டன் அரசு அதிரடியாக நிராகரித்துள்ளது

அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரிட்டன்! ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதி மறுப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2026
08:28 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஈரான் மீதான தாக்குதலுக்கு தனது நாட்டு வான்வழி தளங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு அதிரடியாக நிராகரித்துள்ளது. ஈரான் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும் என்று பிரிட்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஸ்விண்டன் நகருக்கு அருகிலுள்ள 'RAF Fairford' தளத்திலிருந்து அமெரிக்காவின் நீண்டதூர குண்டுவீச்சு விமானங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நட்பு நாடு சட்டவிரோதமான ராணுவ நடவடிக்கையில் ஈடுபடும்போது, அதற்கு தளங்களை வழங்கித் துணையாக இருப்பது பிரிட்டன் கொள்கைக்கு எதிரானது என லண்டன் விளக்கம் அளித்துள்ளது.

டிரம்ப்

டியாகோ கார்சியா மற்றும் டிரம்ப் எச்சரிக்கை

இந்த விவகாரம் சாகோஸ் தீவுகளில் உள்ள 'டியாகோ கார்சியா' ராணுவத் தளத்தின் எதிர்காலத்தோடு தற்போது முடிச்சு போடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரிட்டனின் இந்த முடிவை வன்மையாக கண்டித்துள்ளார். "ஆபத்தான ஈரான் அரசை ஒழிக்க டியாகோ கார்சியா மற்றும் ஃபேர்ஃபோர்ட் தளங்கள் அமெரிக்காவிற்கு மிகவும் அவசியம். சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் பிரிட்டன் தாரை வார்க்கக் கூடாது" என 'ட்ரூத் சோஷியல்'-லில் பதிவிட்டுள்ளார். சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் ஒப்படைத்துவிட்டு, டியாகோ கார்சியா தளத்தை மட்டும் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. தற்போதைய ஒப்பந்தப்படி, டியாகோ கார்சியாவை பயன்படுத்தப் பிரிட்டனுக்கு தகவல் தெரிவித்தால் போதுமானது. ஆனால், பிரிட்டன் மண்ணில் உள்ள தளங்களை பயன்படுத்த அந்நாட்டின் நேரடி அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement