NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து
    சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோர முடியாது

    சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து

    எழுதியவர் Sindhuja SM
    Mar 06, 2023
    01:19 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி இனி இங்கிலாந்தில் விண்ணப்பிக்க முடியாது என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

    கடல்வழியாக படகுகளில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சுனக்கின் அரசாங்கம் இந்த வாரத்தின் பிற்பகுதியில் சட்டவிரோத குடியேற்றத்தை ஒடுக்குவதற்கான சட்டத்தை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த புதிய சட்டத்தின் படி, கடல்வழியாக சிறிய படகுகளில் இங்கிலாந்திற்குள் நுழைய முயற்சிப்பவர்கள் நிரந்தரமாக தடை செய்யப்படுவார்கள் என்றும் அதற்கான பொறுப்பு உள்துறைச் செயலாளருக்கு கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இது போல வரும் படகுகளை தடை செய்வது தான் முதல் கடமை என்று கூறிய சுனக், "தவறு செய்யாதீர்கள், நீங்கள் சட்டவிரோதமாக இங்கு வந்தாலும் உங்களால் இங்கு தங்க முடியாது." என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு

    புலம்பெயர்ந்தோர்கள் தங்க அனுமதி இல்லை

    "இங்கிலாந்தில் வரி செலுத்துவோருக்கு நாம் செய்யும் நியாயமான காரியம் இதுவல்ல. சட்டவிரோத இடம்பெயர்வு நியாயமானது அல்ல, சட்டப்பூர்வமாக இங்கு வருபவர்களுக்கும் இது நியாயமானது இல்லை. குற்றம் செய்யும் கும்பல்களின் ஒழுக்கக்கேடான வர்த்தகத்தைத் தொடர அனுமதிப்பது சரியல்ல. இது போன்ற படகுகளை நிறுத்துவதாக நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் நான் உறுதியாக இருக்கிறேன். " என்று சுனக் கூறியுள்ளார்.

    இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எல்லையைத் தாண்டிய பிறகு தஞ்சம் கோர அனுமதிக்கும் சட்டங்கள் உள்ளன.

    பொதுவாக, புலம்பெயர்ந்தோர் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் புதிய சட்டம் அத்தகைய புலம்பெயர்ந்தோர்கள் தஞ்சம் கோருவதைத் தடுக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யுகே
    உலகம்
    இங்கிலாந்து

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    யுகே

    இறுதி சடங்குக்கு பதில் பார்ட்டி வைத்த பாட்டி உலகம்

    உலகம்

    இன்றோடு வாட்ஸ்அப்-க்கு 14 வயது! உருவான சுவாரசிய கதை வாட்ஸ்அப்
    உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன் அமெரிக்கா
    ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா ரஷ்யா
    ரஷ்யா-உக்ரைன் மோதல்: அமைதி பேச்சு வார்த்தைக்கு சீனா அழைப்பு ரஷ்யா

    இங்கிலாந்து

    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்
    கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம் உலக செய்திகள்
    இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சை: இளவரசர் ஹாரி தாக்கப்பட்டாரா?! உலகம்
    மனிதர்களின் உயிர் உங்களுக்கு பகடைக்காயா?! இளவரசர் ஹாரியை விமர்சிக்கும் தாலிபான்! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025