Loading...
சீனாவில் 'டால்பின்' சூறாவளித் தாக்குதல்: 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்
சீனாவில் 'டால்பின்' சூறாவளித் தாக்குதல்

சீனாவில் 'டால்பின்' சூறாவளித் தாக்குதல்: 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 10, 2026
03:58 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை இந்த ஆண்டின் மிகக் கடுமையான டால்பின் சூறாவளி தாக்கியுள்ளதை தொடர்ந்து, அந்நாட்டின் நிதி தலைநகரான ஷாங்காய் உட்பட பல்வேறு மாகாணங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த புயல் காற்றால் ஷாங்காய் விமான நிலையத்தில் மட்டும் சுமார் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜெஜியாங் மாகாணத்தின் யுஹுவான் மற்றும் வென்ஜோ நகரங்களில் அடுத்தடுத்து கரையை கடந்த இந்த சூறாவளி, அப்பகுதி முழுவதையும் வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட பிரபல சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகள்

மாகாணங்களில் தீவிர மீட்புப் பணிகள்

டால்பின் சூறாவளி தற்போது வெப்பமண்டல புயலாக குறைந்திருந்தாலும், ஜெஜியாங், ஷான்டாங், அன்ஹுய் மற்றும் ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் புதன்கிழமை வரை கனமழையும் நிலச்சரிவும் தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வென்ஜோ நகரில் 9 லட்சத்திற்கும் அதிகமானோரும், தைஜோ நகரில் 3,90,000 பேரும் வெளியேற்றப்பட்டு 1,000-க்கும் மேற்பட்ட அவசரகால நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவைத் தாக்குவதற்கு முன் இச்சூறாவளி காரணமாகப் பிலிப்பைன்ஸில் பெய்த கனமழையால் 8 பேர் உயிரிழந்தனர்.

தற்போது வட திசையை நோக்கிச் சூறாவளி நகர்ந்து வரும் நிலையில், ஆபத்தான பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறும், பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்குக் கட்டணம் ஏதுமில்லை என்றும் உள்ளூர் நிர்வாகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

ADVERTISEMENT