Page Loader
ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப் 
அமெரிக்க வரலாற்றில் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆவார்.

ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப் 

எழுதியவர் Sindhuja SM
Jun 13, 2023
06:48 pm

செய்தி முன்னோட்டம்

ரகசிய ஆவணங்கள் வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜூன் 13ஆம் தேதி 1900 GMT மணிக்கு மியாமியில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். (இந்திய நேரம்: இன்று நள்ளிரவு 12:30 மணி) அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ரகசிய ஆவணங்களை கையாண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ட்ரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகு இரகசிய அரசாங்க ஆவணங்களை தனது புளோரிடா வீட்டில் வைத்திருந்ததாக ஃபெடரல் கிராண்ட் ஜூரி அவர் மீது குற்றஞ்சாட்டி உள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணைக்காக டிரம்ப் ஜூன் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்ற வாரம் உத்தரவிடப்பட்டிருந்தது.

உஹதுபிக்

 கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் 

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, இரண்டாவது முறையாக டிரம்ப் நீதிமன்றத்திற்கு செல்ல இருக்கிறார். இதற்கு முன்னதாக, ஒரு ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்தற்காக டொனால்டு டிரம்ப் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்ற விசாரணைக்கு சென்றார். அமெரிக்க வரலாற்றில் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆவார். அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் மீண்டும் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க நீதித்துறையால் தொடரப்பட்ட இந்த கிரிமினல் வழக்கு, முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ஒரு பெரும் சரிவாகும். 1900 GMT மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு, தனது நியூ ஜெர்சி கோல்ஃப் மைதானத்திற்குத் திரும்பிச் செல்ல திட்டமிட்டிருக்கும் டிரம்ப், அங்கு ஒரு கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்.