NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் தினசரி அலவன்ஸ் வெறும் $5 தானா; டொனால்ட் டிரம்ப் பதில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் தினசரி அலவன்ஸ் வெறும் $5 தானா; டொனால்ட் டிரம்ப் பதில்
    விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் ஊதியம் இவ்ளோதானா?

    விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் தினசரி அலவன்ஸ் வெறும் $5 தானா; டொனால்ட் டிரம்ப் பதில்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 22, 2025
    05:31 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒன்பது மாதங்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த பிறகு இந்த வாரம் பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கான ஓவர்டைம் ஊதியம் குறித்து டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

    விண்வெளியில் கூடுதல் நேரம் வேலை பார்த்ததற்கான ஊதியத்தை தனிப்பட்ட முறையில் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

    முன்னதாக, பத்திரிகையாளர் கேள்வியின்போது, விண்வெளியில் அவர்கள் இருவரும் தங்கியிருந்த காலத்திற்கு தினசரி ஊதியமாக $5 என மொத்தம் $1,430 ஓவர்டைம் ஊதியமாக வழங்கப்படுவது குறித்து அவர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

    ஊதியம்

    சுனிதா வில்லியம்ஸின் வருடாந்திர ஊதியம்

    ஓவர்டைம் ஊதியம் குறைவானதாக இருந்தாலும், சுனிதா வில்லியம்ஸிற்கு வருடாந்த ஊதியமாக தோராயமாக $152,258 வழங்கப்படுகிறது.

    இது அமெரிக்க கூட்டாட்சி அரசு நிறுவனமான நாசா வழங்குகிறது. மேலும்,நாசாவின் ஊழியர் விதிமுறைகள் அடிப்படையிலேயே அவர்கள் விண்வெளிக்கு சென்றபோது அலவன்ஸ் தொகை ஒவ்வொரு நாளுக்கும் $5 என்ற வீதத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, அவர்களின் தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நாசாவால் பார்த்துக் கொள்ளப்பட்டது.

    இதற்கிடையே, செய்தியாளர் சந்திப்பின்போது டொனால்ட் டிரம்ப், ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் மூலம் அவர்கள் திரும்புவதற்கு வசதி செய்ததற்காக ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கையும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுனிதா வில்லியம்ஸ்
    சுனிதா வில்லியம்ஸ்
    டொனால்ட் டிரம்ப்
    விண்வெளி

    சமீபத்திய

    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்

    சுனிதா வில்லியம்ஸ்

    சுனிதா வில்லியம்ஸ் எப்போது திரும்புவார்? இன்று NASA தெரிவிக்கக்கூடும்  தொழில்நுட்பம்
    நாசாவின் புதிய புதுப்பிப்பு, சுனிதா வில்லியம்ஸ் விரைவில் பூமிக்கு திரும்பும் நம்பிக்கையை வழங்குகிறது நாசா
    சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்; ஸ்பேஸ்எக்ஸ் உடன் நாசா பேச்சுவார்த்தை நாசா
    விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், அவரது கணவர் கூறுவது என்ன? விண்வெளி

    சுனிதா வில்லியம்ஸ்

    சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்: நாசா அறிவிப்பு நாசா
    12 ஆண்டுகளில் முதல் முறையாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி நடைப்பயணம் நாளை தொடங்குகிறது: எப்படி பார்ப்பது சுனிதா வில்லியம்ஸ்
    சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் தாமதம்; நாசா சொல்வது என்ன? சுனிதா வில்லியம்ஸ்
    225 நாட்கள் விண்வெளியில் சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - 6 மணி நேர விண்வெளி நடையை முடித்தார் சுனிதா வில்லியம்ஸ்

    டொனால்ட் டிரம்ப்

    ராணுவத்தில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான தடை உத்தரவை அமல்படுத்தியது அமெரிக்க ராணுவம் அமெரிக்கா
    சுமார் 10,000 அரசு ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தது அமெரிக்கா அமெரிக்கா
    இந்தியாவில் வாக்குப்பதிவுக்கான 21 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா ரத்து செய்தது; வெளிநாட்டு தலையீடு என பாஜக குற்றச்சாட்டு இந்தியா
    இந்தியாவில் வாக்குப்பதிவுக்கான 21 மில்லியன் டாலர் மானியத்தை ரத்து செய்தது சரியே என்கிறார் டிரம்ப் அமெரிக்கா

    விண்வெளி

    ஜனவரி 21இல் ஆறு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு; எப்படி பார்ப்பது? வானியல்
    வரலாறு படைக்கவுள்ள விண்வெளி நடை! சுனிதா வில்லியம்ஸின் சாதனைப் பணி இன்று சுனிதா வில்லியம்ஸ்
    சுனிதா வில்லியம்ஸின் சாதனை விண்வெளிப் பயணத்தை ஒத்தி வைத்த நாசா  சுனிதா வில்லியம்ஸ்
    இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஏவுதல் ஜனவரி 29ம் தேதி ஏவப்படவுள்ளது இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025