LOADING...
'காசு கொடுத்தால் தான் சீட்!' காசா அமைதி வாரியத்தில் சேர 1 பில்லியன் டாலர் கேட்கும் டிரம்ப்?
காசா அமைதி வாரியத்தில் சேர 1 பில்லியன் டாலர் கேட்கும் டிரம்ப்

'காசு கொடுத்தால் தான் சீட்!' காசா அமைதி வாரியத்தில் சேர 1 பில்லியன் டாலர் கேட்கும் டிரம்ப்?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 19, 2026
12:46 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசா போருக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் புனரமைப்பிற்காக அமைதி வாரியம் (Board of Peace) என்ற புதிய சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளார். 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முறையாக அறிவிக்கப்பட்ட இந்த வாரியம், ஐநா சபைக்கு ஒரு மாற்றாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த வாரியத்தின் தலைவராக டிரம்ப் செயல்படுவார். சமீபத்தில் கசிந்த இந்த வாரியத்தின் வரைவுச் சாசனத்தின்படி, இதில் சேரும் நாடுகளுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நிபந்தனைகள்

நிபந்தனைகள் என்னென்ன?

சாதாரண உறுப்பினர்: எந்தவொரு நாடும் உறுப்பினராகலாம், ஆனால் அவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே. நிரந்தர உறுப்பினர்: ஒரு நாடு இந்த வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக இருக்க விரும்பினால், அவர்கள் முதல் ஆண்டிற்குள் 1 பில்லியன் டாலர் (சுமார் ₹8,300 கோடி) ரொக்கமாக வாரியத்தின் நிதியில் செலுத்த வேண்டும். இந்த நிதி காசாவின் புனரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரம்

அதிகாரமும் கட்டுப்பாடும்

இந்த வாரியம் வெறும் ஆலோசனைக் குழுவாக மட்டுமல்லாமல், காசாவின் நிர்வாகத்தைக் கண்காணிக்கும் ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கும். டிரம்ப் இந்த வாரியத்தின் தலைவராக இருந்து உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம், முடிவுகளுக்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் மற்றும் வாரியத்தின் முத்திரையை அங்கீகரிக்கும் அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டிருப்பார். இதில் ஜாரெட் குஷ்னர், டோனி பிளேர் போன்ற முக்கியப் புள்ளிகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.

Advertisement

அழைப்பு

உலக நாடுகளுக்கு அழைப்பு

இந்த வாரியத்தில் சேர இந்தியா உட்பட 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா: பிரதமர் மோடிக்கு இதற்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா இதுவரை இதற்கு அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை. மற்ற நாடுகள்: கனடா, துருக்கி, எகிப்து, அர்ஜென்டினா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா போன்ற நாடுகள் ஏற்கனவே இதில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளன.

Advertisement