அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம்; ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (பிப்ரவரி 1) வெளியிட்ட நிர்வாக உத்தரவின் மூலம், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளார்.
பல்வேறு குடியேற்ற முறைகளால் உருவாக்கப்பட்ட ஒரு நாட்டில் ஒற்றுமையை மேம்படுத்துவதே இந்த முடிவின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990 களில் அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டனின் ஆணையை இந்த உத்தரவு ரத்து செய்கிறது.
அந்த ஆணையில் அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு நிதி மூலம் இயங்கும் நிறுவனங்கள் பல மொழிகளில் உதவி வழங்க வேண்டும் என்று இருந்தது.
அது தற்போது மாற்றப்பட்டு, புதிய உத்தரவின் கீழ், நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் பன்மொழி சேவைகளின் அளவு குறித்து தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என தெறிக்கப்பட்டுளளது.
350க்கும் மேற்பட்ட மொழிகள்
அமெரிக்காவில் 350க்கும் மேற்பட்ட மொழிகள்
டொனால்ட் டிரம்பின் உத்தரவில், அமெரிக்கா நிறுவப்பட்டதிலிருந்து நாட்டின் நிர்வாகத்திற்கு ஆங்கிலம் மையமாக உள்ளது என்பதை வலியுறுத்துகிறது.
அமெரிக்காவில் 350க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன என்பதை வெள்ளை மாளிகை ஒருபுறம் ஒப்புக்கொண்டாலும், பயனுள்ள தொடர்பு மற்றும் நிர்வாகத்திற்கு ஆங்கிலம் அவசியம் என்று வலியுறுத்தி உள்ளது.
இந்த கொள்கை மாற்றம் இருந்தபோதிலும், இந்த உத்தரவு அமெரிக்க அரசின் சேவைகளில் உடனடியாக மாற்றத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தவில்லை.
2019 ஆம் ஆண்டின் அரசாங்க தரவுகளின்படி, கிட்டத்தட்ட 68 மில்லியன் அமெரிக்கர்கள் வீட்டில் ஆங்கிலம் அல்லாத வேறு மொழியைப் பேசுகிறார்கள்.
இதில் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் ஸ்பானிஷ் பேசுகிறார்கள். அமெரிக்காவின் மொழியியல் பன்முகத்தன்மையில் சீன, வியட்நாமிய மற்றும் ஏராளமான பூர்வீக அமெரிக்க மொழிகளும் அடங்கும்.