
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது
செய்தி முன்னோட்டம்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) கைது செய்யப்பட்டார்.
அட்லாண்டாவின் ஃபுல்டன் கவுண்டி சிறையில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அரை மணி நேரத்திற்குள் $200,000 பிணைப்பத்திரம் எழுதி தந்து, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மோசடி செய்து வெற்றிபெற முயன்றது தொடர்பாக 13 குற்றசாட்டுகள் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சுமத்தப்பட்டன.
தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றசாட்டுகளை முற்றிலுமாக மறுத்த டிரம்ப், தனது தேர்தல் பிரச்சாரத்தை கெடுக்க சிலர் அரசியல் சதி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர், அட்லாண்டாவில் உள்ள ஃபுல்டன் கவுண்டி சிறையில் சரணடைய டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில்,தன்னுடைய கைது பற்றி X-தளத்தில் (முன்னதாக ட்விட்டர்) பதிவிட்டுள்ளார்
ட்விட்டர் அஞ்சல்
டொனால்ட் டிரம்ப் கைது
https://t.co/MlIKklPSJT pic.twitter.com/Mcbf2xozsY
— Donald J. Trump (@realDonaldTrump) August 25, 2023