LOADING...
ரஷ்யா-உக்ரைன் போர்: அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு டொனால்ட் டிரம்பை மாஸ்கோவிற்கு அழைத்தார் விளாடிமிர் புடின்
அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு டொனால்ட் டிரம்பை மாஸ்கோவிற்கு அழைத்தார் விளாடிமிர் புடின்

ரஷ்யா-உக்ரைன் போர்: அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு டொனால்ட் டிரம்பை மாஸ்கோவிற்கு அழைத்தார் விளாடிமிர் புடின்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 16, 2025
08:07 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் அலாஸ்காவில் நடைபெற்ற உயர்மட்ட உச்சிமாநாட்டை நல்ல விதமாக இருந்ததாகக் குறிப்பிட்டனர். பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமான மற்றும் மரியாதைக்குரிய சூழ்நிலையில் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், இரு தலைவர்களும் பல விஷயங்களில், குறிப்பாக உக்ரைனில் நடந்து வரும் போர் குறித்த முன்னேற்றத்தை எடுத்துரைத்தனர். ஊடகங்களுக்கு உரையாற்றிய விளாடிமிர் புடின், உக்ரைன் குறித்து டிரம்புடன் ஒரு புரிந்துகொள்ளுதலை எட்டியதாகவும், இந்த முன்னேற்றத்தை சிறுமைப்படுத்தும் ஐரோப்பாவை எச்சரித்ததாகவும் கூறினார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை மறைமுகமாக விமர்சித்த புடின், டிரம்ப் பதவியில் இருந்திருந்தால் 2022இல் மோதல் வெடித்திருக்காது என்று கூறினார். அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு எதிராக அமெரிக்காவை அவர் முன்பு எச்சரித்ததை நினைவு கூர்ந்தார்.

அச்சுறுத்தல்

ரஷ்யாவிற்கு அடிப்படை அச்சுறுத்தல்

உக்ரைனில் உள்ள நிலைமை ரஷ்யாவிற்கு ஒரு அடிப்படை அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் உக்ரைனின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்ற டிரம்பின் கருத்துடன் உடன்பட்டார். இறுதி ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தினார். உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் நேட்டோ தலைவர்களுக்கு விவாதங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளதாகவும் அவர் அறிவித்தார். டொனால்ட் டிரம்ப் 2016 தேர்தல்களில் ரஷ்ய தலையீடு இருப்பதாகக் கூறப்படும் சர்ச்சையையும் மீண்டும் எழுப்பி, அதை ஒரு புரளி என்று நிராகரித்தார். இதற்கிடையே, அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு புடின் டிரம்பை மாஸ்கோவிற்கு அழைத்ததன் மூலம் உச்சிமாநாடு முடிந்தது.