NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இதய நோயால் மயங்கி விழுந்த தாய்லாந்து இளவரசி - 3 வாரமாகியும் சுயநினைவு திரும்பவில்லை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இதய நோயால் மயங்கி விழுந்த தாய்லாந்து இளவரசி - 3 வாரமாகியும் சுயநினைவு திரும்பவில்லை
    தாய்லாந்து இளவரசி பஜ்ராகிதியாபா மஹிடோல்

    இதய நோயால் மயங்கி விழுந்த தாய்லாந்து இளவரசி - 3 வாரமாகியும் சுயநினைவு திரும்பவில்லை

    எழுதியவர் Nivetha P
    Jan 09, 2023
    05:52 pm

    செய்தி முன்னோட்டம்

    தாய்லாந்தின் மஹா வஜிரலோங்கோரனின் முதல் மனைவியின் ஒரே மகள் இளவரசி பஜ்ராகிதியாபா மஹிடோல் ஆவார்.

    44 வயதாகும் இவர் நவம்பர் 15ம் தேதி பாங்காக் நகரம் அருகே தனது வளர்ப்பு நாய்களுக்கு பயிற்சியளிக்க ஓர் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மஹிடோல் திடீரென மயக்கமிட்டு அங்கேயே சரிந்துள்ளார்.

    இதனையடுத்து மயங்கி விழுந்த இளவரசியை பாங்காக்கில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சையளித்த மருத்துவர்கள் இதய நோய் பாதிப்பு காரணமாகவே அவர் மயங்கி விழுந்தார் என்று தெரிவித்தனர்.

    3 வாரமாக சுயநினைவு திரும்பவில்லை

    இளவரசியின் இதயம், கிட்னி மற்றும் நுரையீரலை மருத்துவ உபகரணங்கள் கொண்டு இயக்கம்-மருத்துவர்கள் தகவல்

    இளவரசியின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் உள்ளது எனினும் இதயத்துடிப்பு சரியாக இயங்காத காரணத்தினால் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்று அரண்மனை சார்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இச்சம்பவம் நடந்து 3 வாரம் ஆகியதையடுத்து, தற்போது இளவரசியின் உடல்நிலை குறித்து அரண்மனை மீண்டும் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன்படி, "மயங்கி விழுந்த இளவரசி மஹிடோலுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை, மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிப்பதோடு, இதயம், கிட்னி மற்றும் நுரையீரல் முதலியனவற்றை மருத்துவ உபகரணங்கள் கொண்டு இயக்கி வருகிறார்கள். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்" என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்
    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! பயனர் பாதுகாப்பு
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025