LOADING...
உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்!
திருமதி அழகி போட்டியில் சாதித்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி

உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்!

எழுதியவர் Sindhuja SM
Dec 13, 2022
05:49 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டை சேர்ந்த பெண் உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு 'சர்வதேச மக்களின் தேர்வு' என்னும் அழகி பட்டத்தை வென்றுள்ளார். கோவை மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி என்ற பெண் சர்வதேச அழகி போட்டியில் சாதித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார். நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நளினிக்கும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. 14 -60 வயதினர் பலர் கலந்துகொண்ட இந்த போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் அடுத்த முறை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

அழகி

யாரிந்த சிங்கப்பெண்?

யோகா பயிற்சியாளர், பெண் தொழில்முனைவாளர், மனநல சிகிச்சை நிபுணர், எழுத்தாளர் என்று பல திறமைகளைக் கொண்ட இவர் இரு பெண் குழந்தைகளின் தாய் ஆவார். இவர் ஏற்கனவே மும்பையில் நடந்த 'மிசஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக்' என்னும் அழகி போட்டியில் கடந்த ஆண்டு பட்டம் வென்றவர். இவர் சமூக சேவையிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.