டிரம்பின் படுகொலை முயற்சி திட்டமிடப்பட்ட சதியா? இணையவாசிகள் குற்றச்சாட்டு
பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பேரணியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயற்சி நடந்ததை அடுத்து, சமூக ஊடகங்களில் இது பெரும் சதி என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்ட்டது. இந்த தாக்குதலில் டொனால்ட் டிரம்பின் வலது காதை துப்பாக்கி குண்டு துளைத்தது. உயிர் பிழைத்த அவர், "நான் அன்று இறந்திருக்க வேண்டியவன்." என்று இன்று தெரிவித்துள்ளார். டிரம்ப் மீது தாக்குதல் நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்(20), குடியரசு கட்சியின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். அதன் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
டொனால்ட் டிரம்பின் திட்டமிடப்பட்ட சதி என்று குற்றச்சாட்டு
இந்நிலையில், டொனால்ட் டிரம்பை இந்த தேர்தலில் வெற்றி பெற செய்வதற்கான சதி திட்டமே இது என்ற குற்றச்சாட்டுகள் இணையத்தில் எழுந்துள்ளன. திட்டமிடப்பட்ட சதி என்ற வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அனால், இந்த கூற்றுக்களை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை. டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இந்த சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என ஜனநாயக மூலோபாயவாதி டிமிட்ரி மெல்ஹார்ன் ஒரு மின்னஞ்சலில் கூறியுள்ளார். இதற்கிடையில், சம்பவம் நடப்பதற்கு முன்பே, ஒரு நபர் துப்பாக்கியுடன் கூரைக்கு மேல் நிற்பதை அந்த பேரணியில் இருந்த பலர் கண்டதாகவும், அது குறித்து பாதுகாப்பு படையினரை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
பைடன் தான் இந்த தாக்குதலைத் திட்டமிட்டார் என்று ஒரு சாரர் குற்றச்சாட்டு
ஆனால், இது குறித்து பாதுகாப்பு படையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இது உள் வேலையாகவே இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சுமார் 45 வருடங்களுக்கு பிறகு, ஒரு முன்னாள் அதிபர் மீது அமெரிக்காவில் நடத்தப்படும் கொலை முயற்சி இதுவாகும். இந்த சம்பவம் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் "ஆழ்ந்த மாநில சதி"யின் ஒரு பகுதி என்று சதி கோட்பாட்டாளர் அலெக்ஸ் ஜோன்ஸ் கூறியுள்ளார். பைடன் தான் இந்த தாக்குதலைத் திட்டமிட்டார் என்றும் ஒரு படுகொலையைத் தூண்டியதற்காக வர மீது வழக்கு போட வேண்டும் என்றும் பிரதிநிதி மைக் காலின்ஸ் கூறியுள்ளார். ஆனால், முதற்கட்ட தகவலின்படி, இது ஒரு தனிநபரின் கொலை முயற்சி என்று FBI தெரிவித்துள்ளது.