ஓமானில் மசூதி அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி, பலர் காயம்
ஓமானின் வாடி அல்-கபீரில் உள்ள மசூதிக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ஓமானிய காவல்துறை செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. "முதற்கட்ட தகவல்களின்படி, வாடி அல் கபீர் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ராயல் ஓமன் போலீசார் கையாண்டனர், இதன் விளைவாக நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்", என ராயல் ஓமான் காவல்துறையின் எக்ஸ் பதிவு தெரிவிக்கிறது. இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் பயங்கவரவாதிகளா, அதற்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.