
பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம்
செய்தி முன்னோட்டம்
இந்திய பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம் சூட்டியுள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்டி செய்தித்தளம் பகிர்ந்துள்ள வீடியோவில் அவர் இவ்வாறு கூறுகிறார்.
"நாம் பிரதமர் மோடியுடன், அரசியல் ரீதியாக நல்ல உறவுகளைக் கொண்டுள்ளோம். அவர் மிகவும் புத்திசாலி".
"பிரதமர் மோடியின் தலைமையில். இந்தியா வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இது இந்தியாவும், ரஷ்யாவும் கொள்கைகளில் கொண்டுள்ள ஆர்வத்தை முழுமையாக அடைய உதவுகிறது" என பேசி உள்ளார்.
ரஷ்ய அதிபர் தொடர்ந்து இந்தியாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் பாராட்டி வருகிறார்.
அண்மையில் புதின் இந்தியாவின் "மேக் இன் இந்தியா" திட்டம் குறித்தும் புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ரஷ்ய அதிபர் அண்மைக்காலமாக இந்தியாவை தொடர்ந்து புகழ்ந்து வருகிறார்
📹 Narendra Modi is a "very wise man"- Vladimir Putin
— RT_India (@RT_India_news) October 4, 2023
While praising the historically-friendly ties between the countries, the Russian President said India has been making "great strides in its development" under Modi's leadership.#Russia | #India | #VladimirPutin |… pic.twitter.com/X1s9e12uSz