LOADING...
இரண்டு கால்களும் இல்லாத நிலையில் கைகளால் மட்டுமே எவரெஸ்ட் சிகரம் ஏறிய ரஷ்ய மாற்றுத்திறனாளி வீரர்
கைகளால் மட்டுமே எவரெஸ்ட் சிகரம் ஏறிய ரஷ்ய மாற்றுத்திறனாளி வீரர்

இரண்டு கால்களும் இல்லாத நிலையில் கைகளால் மட்டுமே எவரெஸ்ட் சிகரம் ஏறிய ரஷ்ய மாற்றுத்திறனாளி வீரர்

எழுதியவர் Venkatalakshmi V
May 22, 2026
05:14 pm

செய்தி முன்னோட்டம்

கட்டிட விபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்த ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ருஸ்டாம் நபீவ், செயற்கைக் கால்கள் ஏதுமின்றித் தனது கைகளை மட்டுமே பயன்படுத்தி உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உலக சாதனை படைத்துள்ளார். மலையேற்ற வரலாற்றிலேயே இரண்டு கால்களும் இல்லாத ஒருவர், கைகளின் பலத்தால் மட்டுமே எவரெஸ்ட் உச்சியை அடைவது இதுவே முதல்முறையாகும். கடந்த 2015-ஆம் ஆண்டு ராணுவ முகாம் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய நபீவ், தனது இரண்டு கால்களையும் இழந்தார். எனினும், அந்தப் பெரிய சோகம் அவரது தன்னம்பிக்கையை முடக்கவில்லை. 8,848.86 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி இந்த 2026 வசந்த கால மலையேற்றப் பருவத்தில் பயணத்தைத் தொடங்கினார்.

மன உறுதி

15 மணி நேரப் போராட்டமும் மன உறுதியும்

எவரெஸ்ட்டின் மிக ஆபத்தான பகுதியான 'கும்பு பனிப்பொழிவு' பகுதியை வெறும் கைகளால் ஏணிப் படிகளில் கடக்க இவருக்கு 15 மணி நேரம் ஆகியுள்ளது. இறுதியாக மே 20 அன்று காலை 8:16 மணிக்கு எவரெஸ்ட் உச்சியை அடைந்து வரலாற்றுச் சாதனை படைத்தார். முன்னதாக முன்னாள் கூர்கா வீரரான ஹரி புதா மகர் என்பவர் செயற்கைக் கால்களைப் பயன்படுத்தி எவரெஸ்ட் ஏறியிருந்த நிலையில், ருஸ்டாம் கைகளால் மட்டுமே ஏறிப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். எவரெஸ்ட் உச்சியை அடைந்தவுடன் ருஸ்டாம் நபீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உருக்கமான செய்தி இணையத்தில் பலரை நெகிழச் செய்துள்ளது. "உங்களுக்குள் உயிர் இருக்கும் வரை போராடுங்கள்! இறுதிவரை போராடுங்கள்! அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement