ரஷ்ய அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராகிறார் புடின்
செய்தி முன்னோட்டம்
விளாடிமிர் புடின், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரஷ்யாவின் தேர்தலில், இமாலய வெற்றிபெற்று தன்னுடைய அதிபர் பதவியை மீண்டும் தொடரவுள்ளார்.
இந்த பதவிகாலத்தை அவர் நிறைவு செய்யும்போது, 200 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யாவின் நீண்ட கால தலைவராக பதவியிலிருந்த ஜோசப் ஸ்டாலினின் சாதனையை, 71 வயதான புடின் முறியடியத்ததாக இருக்கும்.
FOM கருத்துக்கணிப்பின்படி, அதிபர் தேர்தலின் வாக்குகளில், புடின் 87.8% வாக்குகளை வென்றார்.
இது ரஷ்யாவின் சோவியத்துக்கு பிந்தைய வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச முடிவு என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புடினை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் Nikolai Kharitonov வெறும் 4% உடன் இரண்டாவது இடத்தையும், புதிய அறிமுகமான Vladislav Davankov மூன்றாவது இடத்தையும், Leonid Slutsky நான்காவது இடத்தையும் பிடித்தனர்
ட்விட்டர் அஞ்சல்
ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின்
மீண்டும் ரஷ்யாவின் அதிபராக தேர்வானார், விளாடிமிர் புதின்... #Putin | #Russia | #ThanthiTV pic.twitter.com/NGQQF40ZEN
— Thanthi TV (@ThanthiTV) March 18, 2024
ரஷ்ய அதிபர் தேர்தல்
ஏவுகணை தாக்குதலுக்கு இடையே நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தல்
புடின், மாஸ்கோவில் ஒரு வெற்றி உரையில், உக்ரைன் போரில், ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கை தொடர்புடைய பணிகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், ரஷ்ய இராணுவத்தை வலுப்படுத்துவதாகவும் ஆதரவாளர்களிடம் கூறினார்.
"எங்களுக்கு முன்னால் பல பணிகள் உள்ளன. ஆனால் நாம் ஒருங்கிணைக்கப்படும் போது - யார் நம்மை மிரட்டினாலும், நம்மை அடக்கிவிட வேண்டும் என நினைத்தாலும், வரலாற்றில் யாரும் வெற்றி பெற்றதில்லை. அவர்கள் இப்போது வெற்றிபெறவில்லை. எதிர்காலத்திலும் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்" என்று புடின் கூறினார்.
ரஷ்யாவில் தேர்தல் நடைபெறும் நேரத்தில், உக்ரைன் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்தியது. இதில் பல பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.