Page Loader
நேபாளத்தின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!
புதிய நேபாள பிரதமர் புஷ்ப கமல் தகால்(எ)பிரசந்தா(படம்: Rediff)

நேபாளத்தின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!

எழுதியவர் Sindhuja SM
Dec 26, 2022
06:37 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, சிபிஎன் மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தகால்(எ)பிரசந்தா இன்று நேபாளத்தின் பிரதமராக பதவி ஏற்கிறார். 275 இடங்களைக் கொண்ட இந்த தேர்தலில், 89 இடங்களைக் கைப்பற்றி நேபாள காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆகவே, இதற்கு தனிப்பெரும் கட்சி என்ற புகழும் கிடைத்தது. ஆனால், போதுமான இடங்கள் இல்லாததால் இந்த கட்சியால் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியவில்லை. எனவே, இக்கட்சியின் தலைவரான சேர்பகதூர் தியூபா, முன்னாள் பிரதமரான பிரசந்தாவின் கட்சியோடு இணைந்து ஆட்சி அமைக்க முன்வந்தார். இந்த கட்சிகளுக்கு இடையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் பேரில், இரு கட்சிகளும் தலா 2.5ஆண்டுகள் நேபாளத்தை ஆட்சி செய்யவுள்ளனர்.

புதிய பிரதமர்

யாரிந்த பிரசந்தா?

முன்னாள் பிரதமரான பிரசந்தாவுக்கு முதல் 2.5ஆண்டுகள் கிடைத்துள்ளது. அதனால், இவர் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். 1950 நட்பு ஒப்பந்தத்தின் மறுசீரமைப்பு, காலாபானி மற்றும் சுஸ்டா எல்லைப் பிரச்சனைகள் ஆகிய இந்திய-நேபாள பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்து இந்தியாவுடன் நல்லுறவு கொள்ள வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன் பேசியவர் இவர். இந்த 1950ஆம் ஆண்டின் இந்திய-நேபாள அமைதி மற்றும் நட்பு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் அடித்தளமாக இருக்கிறது. இருந்தாலும் சமீப காலமாக இவரது கருத்துக்கள் இந்தியாவிற்கு சாதகமாக இல்லை என்றும் சீனாவிற்கு சாதகமாக இருக்கிறது என்றும் சந்தேகிக்க படுகிறது. இந்நிலையில், மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமரபோகும் இவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.