Page Loader
மகனுக்கு 'இந்தியா' என பெயர்சூட்டிய பாகிஸ்தான் தம்பதி - வினோத காரணம்
மகனுக்கு 'இந்தியா' என பெயர்சூட்டிய பாகிஸ்தான் தம்பதி - வினோத காரணம்

மகனுக்கு 'இந்தியா' என பெயர்சூட்டிய பாகிஸ்தான் தம்பதி - வினோத காரணம்

எழுதியவர் Nivetha P
Jan 30, 2023
06:59 pm

செய்தி முன்னோட்டம்

ஒமர் இசா என்பவர் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ஆவார். இவரது மனைவி வங்கதேசத்தை சேர்ந்தவர். இந்நிலையில், ஒமர் இசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவிக்கும் அவருக்கும் நடுவில் அவரது மகன் படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்து, அதில் ஓர் வினோத பதிவினை செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், புதிய பெற்றோர்கள் அனைவருக்கும் என்னுடைய எச்சரிக்கை. எங்கள் குழந்தை இப்ராஹிம் பிறந்தவுடன் அவனை எங்கள் படுக்கை அறையிலேயே படுக்க வைத்து கொண்டோம். அப்பொழுது புதிய பெற்றோர்களான எங்களுக்கு அவனது பாதுகாப்பு குறித்து அதீத அக்கறை இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

நகைச்சுவை பதிவு

நடுவில் படுத்துறங்கும் தன் மகனை 'இந்தியா' என அழைப்பதாக பதிவு

மேலும் அந்த பதிவில் அவர், இப்ராஹிம் சிறுவனாக வளர்ந்த பிறகும் கூட அவன் எங்கள் அறையில் எங்களுக்கு நடுவிலேயே படுத்து உறங்குகிறான். அவனுக்கென்று தனி அறை இருந்தும், அவன் உறங்குவதற்கு எங்கள் அறையையே பயன்படுத்துகிறான் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், நான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவன், எனது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவள். இதனால் எங்கள் நடுவில் படுத்துறங்கும் எங்கள் மகனுக்கு புதிய பெயரினை சூட்டியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் நடுவே படுத்திருப்பதால் தன் மகனை 'இந்தியா' என அழைப்பதாக அவர் பதிவில் கூறியுள்ளார். இந்த பதிவானது வைரலாகி பரவி வரும் நிலையில், நகைச்சுவையாக இந்த பதிவை செய்ததாக ஒமர் இசா தெளிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.