NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தானின் முதல் மனித பால் வங்கி மத சர்ச்சைகளுக்கு மத்தியில் செயல்பாடுகளை நிறுத்தியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானின் முதல் மனித பால் வங்கி மத சர்ச்சைகளுக்கு மத்தியில் செயல்பாடுகளை நிறுத்தியது
    ஹராம்" அல்லது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    பாகிஸ்தானின் முதல் மனித பால் வங்கி மத சர்ச்சைகளுக்கு மத்தியில் செயல்பாடுகளை நிறுத்தியது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 26, 2024
    04:05 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சிந்து இன்ஸ்டிடியூட் ஆஃப் சைல்டு ஹெல்த் அண்ட் நியோனாட்டாலஜி (SICHN) மூலம் தொடங்கப்பட்ட பாகிஸ்தானின் முதல் மனித பால் வங்கி, இந்த திட்டத்தை "ஹராம்" அல்லது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கும் மத ஆணையைத் தொடர்ந்து அதன் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது.

    குறைமாத மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தானமாக வழங்கப்படும் தாய்ப்பாலை வழங்குவதற்காக பால் வங்கி நிறுவப்பட்டது.

    இருப்பினும், ஒரு செல்வாக்குமிக்க மத அடிப்படையிலான செமினரியின் திருத்தப்பட்ட ஃபத்வா அல்லது மதத் தீர்ப்பு இப்போது இத்திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

    ஃபத்வா

    'பால் உறவுமுறை' தான் தடைக்கான காரணம்

    டிசம்பர் 2023 இல், தாருல் உலூம் கராச்சி செமினரி பால் வங்கித் திட்டத்தை அங்கீகரித்து ஃபத்வாவை வெளியிட்டது.

    இருப்பினும், அதே செமினரியின் திருத்தப்பட்ட தீர்ப்பு "பால் உறவுமுறையை" மேற்கோளிட்டுள்ளது.

    இது ஒரு இஸ்லாமியக் கருத்தாகும். இது தொடர்பில்லாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் ஒரு பெண் தனது சந்ததிக்கும், குழந்தைக்கும் இடையே திருமணத்தைத் தடைசெய்யும் குடும்ப உறவுகளை வளர்த்துக் கொள்கிறாள் எனக்கூறுகிறது.

    இஸ்லாமிய அறிஞர் முஃப்தி சையத் கைசர் ஹுசைன் திர்மிசி விளக்கியபடி, "இந்த உறவு இரத்த உறவுகளுக்கு ஒத்ததாகும். இது இஸ்லாமிய சட்ட கட்டமைப்பிற்குள் தாய்ப்பால் கொடுக்கும் உடன்பிறப்புகளுக்கு இடையேயான திருமணத்தை தடை செய்கிறது."

    எதிர்ப்பு

    முஸ்லிம் சமூகங்களில் உள்ள பால் வங்கிகள் மத எதிர்ப்பை எதிர்கொள்கின்றன

    ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மேற்கத்திய நாடுகளில் மனித பால் வங்கிகள் செயல்பட்ட போதிலும், பால் உறவின் கருத்து முஸ்லிம் சமூகங்களில் மனித பால் வங்கிகளை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு தடையாக உள்ளது.

    வங்கதேசத்தில் இதேபோன்ற ஒரு முயற்சி, 2019இல் மத எதிர்ப்பின் காரணமாக மூடப்பட்டது.

    ஆரம்பத்தில், SICHN பால் வங்கியின் செயல்பாட்டை அனுமதிக்கும் ஃபத்வாவைப் பெற்றது.

    அது ஷரியா சட்டத்தை மீறுவதைத் தவிர்ப்பதற்காக நன்கொடையாளர்கள் மற்றும் பெறுநர்களின் விரிவான பதிவுகளை வைத்திருந்தது.

    அர்ப்பணிப்பு

    SICHN மருத்துவ மற்றும் மதப் பொறுப்புகளை சமநிலைப்படுத்த உறுதிபூண்டுள்ளது

    பாகிஸ்தானில் குறைமாத மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற பால் வங்கியின் சாத்தியம் இருந்தபோதிலும், தாருல் உலூம் கராச்சியின் திருத்தப்பட்ட ஆணை இந்தத் திட்டத்தை இடைநிறுத்த SICHN ஐ நிர்பந்தித்தது.

    இந்த சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில்,"எங்கள் முதன்மையான குறிக்கோள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வாகும், மேலும் எங்கள் மருத்துவ மற்றும் மதப் பொறுப்புகளை மதிக்கும் தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்." என SICHN கூறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    குழந்தைகள்
    குழந்தைகள் உணவு
    குழந்தைகள் ஆரோக்கியம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வேட்பாளர்கள் அலுவலகத்திற்கு வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலி குண்டுவெடிப்பு
    வெடிகுண்டு அச்சுறுத்தலுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் இன்று பாகிஸ்தானில் பொது தேர்தல் தேர்தல்
    பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கூட்டணி முன்னிலை; சுயேச்சைகளுடன் நவாஸ் ஷெரீப் கட்சி பேச்சுவார்த்தை தேர்தல்
    பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை: நவாஸ் ஷெரீப்பின் அடுத்த திட்டம்  இம்ரான் கான்

    குழந்தைகள்

    உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் உணவு குறிப்புகள்
    பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள்  ஊட்டச்சத்து
    அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு  சிக்கிம்
    ஸ்டெம் செல்ஸ் மூலம் 11 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை சென்னை

    குழந்தைகள் உணவு

    ஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்கள், குழந்தைகளிடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? குழந்தைகள் ஆரோக்கியம்
    Bournvita: 'தவறாக வழிநடத்தும்' விளம்பரங்களை அகற்ற உத்தரவு; எதற்காக என தெரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் ஆரோக்கியம்
    உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க ஹெல்த்தி கோடைகால பானங்கள் குழந்தைகள் ஆரோக்கியம்
    குழந்தைகள் உணவு தயாரிப்பில் களமிறங்கிய அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி, மிச்செல் ஒபாமா அமெரிக்கா

    குழந்தைகள் ஆரோக்கியம்

    பெற்றோர்களே, உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் மொபைல் போன் கொடுக்கலாம்? குழந்தை பராமரிப்பு
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் குழந்தை பராமரிப்பு
    பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தை கூட்ட சில வழிகள் இதோ! குழந்தை பராமரிப்பு
    பெற்றோர்கள் கவனத்திற்கு: குழந்தைகளை சுதந்திரமாகவும், தனிச்சையாகவும் விளையாட ஊக்குவிக்க வேண்டும் குழந்தை பராமரிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025