2026க்குள் 77 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை பாகிஸ்தான் அடைக்க வேண்டும்
செய்தி முன்னோட்டம்
ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2026க்குள் 77.5 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனை பாகிஸ்தான் திருப்பிச் செலுத்த வேண்டும்.
ஏற்கனவே பணப்பற்றாக்குறையில் இருக்கும் பாகிஸ்தான்,பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், "சீர்குலைக்கும் விளைவுகளை" சந்திக்க நேரிடும், என்று ஒரு அமெரிக்க சிந்தனைக் குழு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் அமைதி நிறுவனம்(USIP) வியாழனன்று வெளியிட்ட ஒரு ஆய்வில், அதிகரிக்கும் பணவீக்கம், அரசியல் மோதல்கள் மற்றும் அதிகரித்து வரும் பயங்கரவாதத்திற்கு மத்தியில், பாகிஸ்தான் அதன் வெளிநாட்டுக் கடன் பொறுப்புகளால் மேலும் ஆபத்தை எதிர்கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி, அதிக வெளிநாட்டுக் கடன், குறைந்த உள்ளூர் நாணய மதிப்பு மற்றும் குறைவான அந்நிய செலாவணி கையிருப்பு போன்ற பிரச்சனைகளால் பாகிஸ்தான் பெரும் பொருளாதார பிரச்சனையில் சிக்கி உள்ளது.
உலகம்
77.5 பில்லியன் டாலர்களை பாகிஸ்தான் கட்டுவது கடினம்
ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2026க்குள் வெளிநாடுகளுக்கு கட்ட வேண்டிய 77.5 பில்லியன் டாலர்களை பாகிஸ்தான் கட்டுவது கடினம் என்றும் 350 பில்லியன் பொருளாதாரத்தரமான பாகிஸ்தானுக்கு அது "பெரிய தொகை" என்றும் USIP அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால், பாகிஸ்தானிய அதிகாரிகள் சீனர்களை சமாதானப்படுத்தி இரண்டு கடன்களையும் மறுநிதியளிப்பதற்கு ஒப்புக்கொள்ள வைத்துவிடலாம் என்று நம்புகிறார்கள். சீன அரசாங்கமும் வணிக வங்கிகளும் ஏற்கனவே அப்படி செய்திருப்பதால் அந்த சாத்தியம் இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
அப்படி நடந்தாலும் அதற்கடுத்த நிதியாண்டு பாகிஸ்தானுக்கு மிகவும் சவாலாக மாறும். ஏனெனில் அவர்களது கடன்கள் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயரும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது