தொலைக்காட்சி நேரலையில் மாறி மாறி உதைத்துக்கொண்ட பாகிஸ்தான் தலைவர்கள்; வைரலாகும் காணொளி
பாகிஸ்தானின் பிரதான காட்சிகள் இரண்டு. ஒன்று பிடிஐ மற்றொன்று PML-ன். இந்த இருகட்சிகளின் தலைவர்கள் முறையே இம்ரான் கான் மற்றும் நவாஸ் ஷெரிஃப் ஆகியோர். இதில் இம்ரான் கான் தற்போது ஊழல் புகாரில் சிக்கி சிறைப்பட்டுள்ளார். இதை நிலையில், இம்ரான் கானின் வழக்கறிஞர் ஷேர் அப்சல் கான் மார்வாட் மற்றும் PML-N செனட்டர் அஃப்னான் உல்லா கான். இருவரும், பாகிஸ்தானின் பிரதான தொலைக்காட்சியான எக்ஸ்பிரஸ் டிவியில், பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜாவேத் சவுத்ரி தொகுத்து வழங்கிய 'கல் தக்' என்கிற விவாத நிகழ்ச்சியில் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க வந்திருந்தனர்.
உதைத்துக்கொண்ட பாகிஸ்தான் தலைவர்கள்
விவாதத்தின் போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தலைவர்களும், ஒருவரையொருவர் முக்கியத் தலைவர்களை " பூட் சாட் " (பூட்லிக்கர்), அதாவது 'ஜால்ரா' என்று அழைக்கத் தொடங்கினர். தொடர்ந்து முற்றிய வாய் சண்டை, கை சண்டையாக மாறியது. இவர்களை விலக்க அங்கே கூடியிருந்தவர்கள் விரைய, இருவரும் ஒரு கட்டத்தில் உதைக்க துவங்கினர். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து இருவரும் அவர்கள் தரப்பு நியாயத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்