Page Loader
சட்டவிரோத திருமண வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி விடுவிப்பு

சட்டவிரோத திருமண வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி விடுவிப்பு

எழுதியவர் Sindhuja SM
Jul 13, 2024
06:18 pm

செய்தி முன்னோட்டம்

சட்டவிரோத திருமண வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரை பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. புஷ்ரா பீபி தனது முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு முன்பே இம்ரான் கானை திருமணம் செய்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. புஷ்ரா பீபியின் முன்னாள் கணவர் கவார் ஃபரித் மேனகா அவர்கள் மீது இந்த வழக்கை தாக்கல் செய்தார். இஸ்லாமிய சட்டத்தை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி மீறியதாக நீதிமன்றம் கண்டறிந்ததையடுத்து, பிப்ரவரி மாதம் அந்த தம்பதியினருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் 

இம்ரான் கான்  விடுவிக்கப்படுவாரா?

இந்நிலையில் இது குறித்த மேல்முறையீட்டு மனுக்களை இன்று விசாரித்த நீதிபதிகள், "வேறு எந்த வழக்கிலும் அவர்கள் தேடப்படாவிட்டால், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்(பி.டி.ஐ) நிறுவனர் இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீபி ஆகியோர் உடனடியாக [சிறையிலிருந்து] விடுவிக்கப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டனர். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல வழக்குகள் போடப்பட்டிருந்தாலும், இந்த வழங்கினால் தான் அவர் தற்போது வரை சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மே 2023இல் நடந்த கலவரத்தை தூண்டிய வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் இம்ரான் கான் மீதான ஜாமீனை இந்த வாரம் நீதிமன்றம் ரத்து செய்ததால், அவர் விடுவிக்கப்படுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.