LOADING...
கிரியேட்டிவ் துறை நிபுணர்கள் ஓமனில் 10 ஆண்டுகள் தங்கி பணிபுரிய வாய்ப்பு; புதிய விசா அறிமுகம்
கிரியேட்டிவ் துறை நிபுணர்கள் ஓமனில் 10 ஆண்டுகள் தங்கி பணிபுரிய வாய்ப்பு

கிரியேட்டிவ் துறை நிபுணர்கள் ஓமனில் 10 ஆண்டுகள் தங்கி பணிபுரிய வாய்ப்பு; புதிய விசா அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 20, 2025
11:58 am

செய்தி முன்னோட்டம்

படைப்பாற்றல் மற்றும் அறிவார்ந்த ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், ஓமன் நாடு புதிய கலாச்சார விசா பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஓமன் விஷன் 2040' (Oman Vision 2040) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் போன்ற படைப்பாற்றல் துறை நிபுணர்களுக்கு ஒன்று, ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் வரை அங்கு தங்கிப் பணியாற்ற வழி வகுக்கிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

கலாச்சார ஒத்துழைப்பு

கலாச்சார ஒத்துழைப்புக்கு முன்னுரிமை

பாரம்பரியமான குடியேற்ற வகைக்கு அப்பாற்பட்ட இந்த விசா, படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஓமன் நாட்டின் முக்கிய முன்னுரிமைகள் என்பதைப் பறைசாற்றுகிறது. இந்த விசாவைப் பெற, விண்ணப்பதாரர்கள் ஓமன் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சகம், பல்கலைக்கழகங்கள் அல்லது கலாச்சார மையங்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஓமன் நிறுவனத்திடமிருந்து ஸ்பான்சர்ஷிப் (sponsorship) ஆதரவைப் பெற வேண்டும். தெற்காசிய படைப்பாளர்களுக்கு இந்த விசா மிகவும் பொருத்தமானது. ஏனெனில் ஓமன் புவியியல் ரீதியான அண்மை, நீண்டகால இந்திய-ஓமன் உறவுகள் மூலம் கலாச்சாரப் பழக்கம் மற்றும் குறைந்த நிர்வாகச் சிக்கல்களை வழங்குகிறது.

விண்ணப்பம்

யார் விண்ணப்பிக்கலாம்? குறைந்த செலவு, குடும்பத்திற்கான சலுகை

எழுத்தாளர்கள், கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் படைப்பாளிகள் என பலதரப்பட்டவர்கள் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ஒரு ஆண்டு, ஐந்து ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகள் என மூன்று கால அவகாசங்கள் வழங்கப்படுகின்றன. இந்தக் கால அவகாசங்களைப் பொருட்படுத்தாமல், அனைத்து கால அவகாசங்களுக்கும் விசாவுக்கு ஆண்டுக்கு 50 ஓமானி ரியால்ஸ் (சுமார் ₹11,500) மட்டுமே செலவாகும்.

சிறப்பு

விசாவின் மிகச்சிறந்த அம்சம்

இதன் மிகச் சிறந்த அம்சங்களில் ஒன்று, கலாச்சாரத்தில் இணைவு விசா (Cultural Joining Visa) மூலம் பிரதான விண்ணப்பதாரரின் வாழ்க்கைத் துணை மற்றும் முதல் நிலை குடும்ப உறுப்பினர்களும் உடன் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இத்தகைய அணுகுமுறை, நீண்ட கால கலாச்சாரப் பணிகளை மேற்கொள்ளும் நிபுணர்களுக்கு ஸ்திரத்தன்மையை வழங்குகிறது. கலாச்சாரப் பங்களிப்பை அங்கீகரிப்பதில் ஓமன் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, படைப்பாற்றல் துறையின் மதிப்பை உயர்த்துவதாகவும், சர்வதேசப் படைப்பாளிகளுக்குப் புதிய வாய்ப்புகளைத் திறப்பதாகவும் கருதப்படுகிறது.