Page Loader
பிரதமரின் பிபிசி ஆவணப்படம் பற்றி அமெரிக்கா கருத்து
இங்கிலாந்து அரசாங்கத்தைப் போல்  அமெரிக்காவும் பிபிசி பனோரமா நிகழ்ச்சிகளில் இருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதமரின் பிபிசி ஆவணப்படம் பற்றி அமெரிக்கா கருத்து

எழுதியவர் Sindhuja SM
Jan 24, 2023
04:28 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவண படத்திற்கு இந்திய அரசு சமீபத்தில் தடைவிதித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், நேற்று(ஜன 23) செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி குறித்த இந்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணத் தொடர் குறித்து தனக்குத் தெரியாது என்று கூறினார். இருந்தாலும், இந்தியாவும் அமெரிக்காவும் இரு "செழிப்பான மற்றும் துடிப்பான ஜனநாயகங்கள்" என்றும் அதன் மதிப்புகளை பற்றி தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் கூறினார். பிபிசி ஆவணப்படத்திற்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் அமெரிக்காவின் நிலைப்பாடு இருப்பதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள்.

இங்கிலாந்து

ஆவணப்படத்தைப் பற்றி கருத்து தெரிவித்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா

2002 குஜராத் கலவரத்தை விசாரித்த இங்கிலாந்து அரசாங்கத்தின் வெளியிடப்படாத அறிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படும் "பிபிசி'ஸ் இந்தியா: தி மோடி கொஸ்டின்" ஆவணப்படத்தைப் பற்றி பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் பேசினார். அப்போது, அவர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து, அமெரிக்காவும் இந்த ஆவணப்படத்தைப் பற்றி பேசி இருப்பதால் இந்த நிகழ்வு அரசியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 2002 கலவரத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி பிரதமர் மோடிக்கு பல ஆண்டுகளாக இங்கிலாந்தும் அமெரிக்காவும் பயணத் தடைகளை வித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆவணப்படம் தொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பிரைஸ், இந்தியாவும் அமெரிக்காவும் "ஆழமான கூட்டாண்மையை" பகிர்ந்துகொள்வதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நீடித்து வருவதாகவும் கூறினார்.