
லாஸ் ஏஞ்சல்ஸ் மீண்டும் பரவும் காட்டுத்தீ: 50,000 மக்களை வெளியேற்ற உத்தரவு
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீ அடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, தற்போது ஒரு புதிய 'Hughes Fire' உருவாகியுள்ளது.
இது கிட்டத்தட்ட 50,000 க்கும் மேற்பட்ட மக்களை நகரை விட்டு வெளியேற தூண்டியுள்ளது.
கலிபோர்னியா வனவியல் மற்றும் தீ பாதுகாப்புத் துறையின்படி, புதன்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட புதிய தீ, 9,400 ஏக்கர் நிலத்தை எரித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸின் வடமேற்கு சுற்றுப்புறத்தில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு பகுதியான கேஸ்டாயிக் ஏரிக்கு அருகே, மூன்றாவது வாரமாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அழிவுகரமான ஈடன் மற்றும் பாலிசேட்ஸ் தீயில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவு வரை இருண்ட புகை மூட்டம் காணப்பட்டது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உடல்நலக் கவலைகள்
காட்டுத்தீ சாம்பலால் அதிகரிக்கும் உடல்நலக்கவலைகள்
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர், எரிந்த தீயில் இருந்து கிளம்பும் சாம்பலை காற்று எடுத்துச் செல்லக்கூடும் என்று எச்சரித்தார்.
நச்சுக் காற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை அறிய நகரத்தின் இணையதளத்தைப் பார்வையிடுமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
LA கவுண்டி பொது சுகாதார இயக்குனர் பார்பரா ஃபெரர், சாம்பல் கன உலோகங்கள், ஆர்சனிக் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை கொண்டு செல்லக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
"சிறிய வெளிப்பாடு கூட சரும எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் மிகவும் கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்" என்று கூறினார். பாதுகாப்பு கியர் அணியுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.