Loading...
நேபாளத்தில் தரையிறங்க முயன்ற 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி பலி
நேபாளத்தில் தரையிறங்க முயன்ற 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

நேபாளத்தில் தரையிறங்க முயன்ற 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி பலி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 03, 2026
11:02 am

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தின் எவரெஸ்ட் மலைப் பகுதியில் அமைந்த சோலுகும்பு மாவட்டத்தில், தரையிறங்க முயன்ற இரண்டு தனியார் நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தலைநகர் காட்மாண்டுவிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள கும்ப பாசாங் லஹமு கிராமப்புற நகராட்சியின் பெரிச்சே ஹெலிபேடில் செவ்வாய்க்கிழமை காலை 8:11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து

தரையிறங்கும் போது சுழலிறக்கைகள் மோதி விபத்து

ஃபிஷ்டெயில் ஏர் மற்றும் ஏர் டைனஸ்டி ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒரே நேரத்தில் பெரிச்சே ஹெலிபேடில் தரையிறங்க முயன்றுள்ளன.

இரு ஹெலிகாப்டர்களும் மிக நெருக்கமாக வந்த நிலையில், அவற்றின் சுழலிறக்கைகள் (Rotor Blades) ஒன்றோடொன்று பலமாக மோதிக்கொண்டன. இதன் வினாடி நேரக் கொடூரக் காட்சிகள் அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளன.

இச்சம்பவத்தில் ஃபிஷ்டெயில் ஏர் ஹெலிகாப்டரில் பயணித்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றிய மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் லுக்லா பகுதிக்குக் கொண்டு சென்றனர்.

விசாரணை

காயமடைந்தவர் மீட்பு & சிவில் விமானப் போக்குவரத்துத் துறை விசாரணை

விபத்தில் காயமடைந்த மற்றொரு நபர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக லுக்லா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAAN) தகவல் அதிகாரி கயானேந்திர பூல் (Gyanendra Bhul) இந்த விபத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

விபத்து நடந்த பெரிச்சே பகுதி கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதால், நிலவிய வானிலை சூழல் அல்லது கட்டுப்பாட்டு அறைத் தொடர்புக் குறைபாடு ஆகியவை விபத்திற்குக் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேபாளத்தின் இமயமலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள், மலைையேறுபவர்கள் மற்றும் அவசர மருத்துவ உதவிகளுக்காக சிறிய ரக ஹெலிகாப்டர்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT