Page Loader
எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு 36% வரை கட்டணம் உயர்வு
சிகரம் ஏறுவதற்கு 36% வரை கட்டணம் உயர்வு

எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு 36% வரை கட்டணம் உயர்வு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 24, 2025
12:49 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான கட்டணத்தை 36% உயர்த்தியுள்ளது நேபாள அரசு. அதன் வருவாயை அதிகரிப்பதற்கும், மலையேற்ற செயல்முறைகளில் உள்ள பாதுகாப்பு மற்றும் பராமரிப்புகளுக்கான செலவுகளை போதுமானளவு நிரப்புவதற்கும் உதவியாக இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கட்டண உயர்வால் மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை குறையாது என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சீனாவின் திபெத் வழி மிகவும் கடினமானதாக உள்ளது. அதனால் நேபாள வழி தான் தற்போது மலையேற்ற வீரர்களுக்கு எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்லும் பொதுவான வழியாக உள்ளது.

விவரங்கள்

மலையேற்றவாசிகள் அதிகம் தேர்வு செய்யும் நேபாள வழி

நேபாளத்தின் இமய மலைப்பகுதியில் சாகர்மாதா தேசிய பூங்காவில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் மலையேற்ற வீரர்கள் நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர். இந்த சீசனில் ஒரு நபருக்கு ரூ.9.51 லட்சம் கட்டணம் விதிக்கப்பட்டது. தற்போது 36 சதவீத கட்டண உயர்வுடன் ஒரு நபருக்கு ரூ.12.96 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் முதல் நவம்பர் வரை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற ரூ.6.48 லட்சமும், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை சிகரத்தில் ஏற ரூ.3.02 லட்சமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.