Loading...
மொஜ்தபா கமேனி உடல்நிலை கவலைக்கிடம்? அப்போது ஈரான்- அமெரிக்கா போர் என்னவாகும்?
மொஜ்தபா கோம் நகரில் சுயநினைவின்றி ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்தி கூறுகிறது

மொஜ்தபா கமேனி உடல்நிலை கவலைக்கிடம்? அப்போது ஈரான்- அமெரிக்கா போர் என்னவாகும்?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 10, 2026
05:09 pm

செய்தி முன்னோட்டம்

ஈரானின் சுப்ரீம் லீடர் மொஜ்தபா கமேனி, அமெரிக்க-இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வருவதாக வெளியாகும் செய்திகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கடந்த பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற தாக்குதலில் முன்னாள் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதில் அவரது மகன் மொஜ்தபாவும் முகத்திலும் வயிற்றிலும் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் கோம் நகரில் சுயநினைவின்றி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பதில்

அதிகாரச் சிக்கலும் போரின் போக்கும்

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஈரான் செய்தி நிறுவனம் 12 வினாடி கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆனால், அதில் தேதி அல்லது நேரம் குறிக்கப்படாததால், இது பழைய வீடியோவாக இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

மேலும், சுப்ரீம் லீடருடன் நேரடியாகத் தொடர்புகொள்வது கடினமாக உள்ளது என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஈரானின் நீதித்துறை மற்றும் ராணுவத்தில் சுப்ரீம் லீடரே முதன்மை அதிகாரம் கொண்டவர்.

இவரது இறப்பு உறுதி செய்யப்பட்டால், புரட்சிகர காவல் படை (IRGC) நாட்டின் முழு அதிகாரத்தையும் தன்வசப்படுத்தக்கூடும்.

இது உள்நாட்டில் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, அமெரிக்காவிற்கு எதிரான போரின் போக்கையும் தீவிரமாக்கும் எனக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT